ப்ளூ சட்டை மாறனுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு!.. ஒருவழியா ஓடிடியில் ரிலீஸான ஆன்டி இண்டியன்!

by Saranya M |   ( Updated:2024-02-27 11:20:58  )
ப்ளூ சட்டை மாறனுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு!.. ஒருவழியா ஓடிடியில் ரிலீஸான ஆன்டி இண்டியன்!
X

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் விமர்சகர் என்றால் சட்டென அனைவரும் ப்ளூ சட்டை மாறன் பெயரை தட்டாமல் சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு பல சினிமா பிரபலங்களுடன் வம்பிழுத்து வைத்திருக்கிறார்.

விமர்சகராக மட்டுமின்றி இயக்குனர் அவதாரத்தையும் இளமாறன் எடுத்திருந்தார். அவர் இயக்கத்தில் வெளியான ஆன்டி இண்டியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மீண்டும் மாமியார் தலையில் மசாலா அரைக்க முயற்சி பண்ணும் ஜெயம் ரவி!.. இயக்குநர் தான் காப்பாத்தணும்!

அரசியல் நையாண்டி படமாக வெளியான அந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு முதலில் தடை விதித்தது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையிட்ட நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில காட்சிகளை நீக்க சொல்லிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான அந்தத் திரைப்படம் இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு ஓடிடியிலும் வெளியாகாத நிலையில், பல ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லாமல் அந்தப் படத்தை பார்க்க முடியாது நிலையில், ஓடிடியிலும் பார்க்கவில்லை.

இதையும் படிங்க: மாளவிகா மோகனனுக்கு கல்யாணமா?.. மணமகள் போல ஜொலிக்கும் ஸ்டில்ஸ்.. என்ன சொன்னாரு தெரியுமா?

இந்நிலையில், இன்று ஒரு வழியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இளமாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தற்போது அவரை ட்வீட் போட்டு அறிவித்திருக்கிறார்.

நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு வந்தது போல ஓடிடியில் வெளியான பின்னர் இந்த படத்துக்கும் ஏதாவது சர்ச்சை வெடிக்குமா? தூக்கி விடுவார்களா? என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Next Story