latest news

நல்லபடம் கொடுக்க நுரைதள்ளுது!.. இதுல போட்டியா?!… ஜீவா, எஸ்.கே-வை கலாய்க்கும் புளூசட்டமாறன்!..

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களம் இறங்கியவர்தான் ஜீவா. ராம், சிவா மனசுல சக்தி, ஈ என கவனம் ஈர்த்தவர். இவரை நடிப்பில் வெளியான கோ திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. ஆனால் கடந்த பல வருடங்களாகவே ஜீவாவுக்கு வெற்றி படங்கள் அமையவில்லை. அவரும் பல படங்களில் நடித்து பார்த்தார். எதுவும் ஹிட் அடிக்கவில்லை.

இந்நிலையில்தான் சமீபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜீவாவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்திருக்கிறது. பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அந்நிலையில்தான் ஜாலியான பொழுது போக்க படமாக வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் (TTT) திரைப்படம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

இந்நிலையில்தன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ஜீவாவிடம் ‘நீங்கள் சிவகார்த்திகேயனுக்கு போட்டியா?’ என்ற ஒரு கேள்வியை கேட்டபோது அதற்கு பதில் சொல்ல ஜீவா ‘நான் நடிக்க வந்த போது நடிக்க வந்த ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ் போன்ற ஆகியோரைத்தான் என் போட்டி நடிகராக பார்க்கிறேன்.. உங்கள் படங்களை பார்த்துதான் வளந்தேன் என சிவகார்த்திகேயனே என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவே, அவர் எனக்கு போட்டியில்லை’ என தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த செய்தியை தனது எக்ஸ தளத்தில் பகிர்ந்த பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் ‘ஒரு நல்ல படம் கொடுக்கவே ஆளாளுக்கு நாக்கில் நுரை தள்ளுது.. இதுல உங்களுக்குள்ள போட்டி வேறயா?’ என கலாய்த்திருக்கிறார்.

Published by
சிவா