வேட்டையனுக்கு பயந்து கோட்டைய விட்டு ஓடலாமா சூர்யா?!.. கேப்பில் கெடாவெட்டும் பிரபலம்!..

by சிவா |   ( Updated:2024-09-01 07:06:45  )
kanguva
X

Vettaiyan: பொதுவாக பெரிய நடிகர் எல்லோருமே தங்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் வெளியாவதை பெரிதும் விரும்புவார்கள். அல்லது இதை இப்படியும் சொல்லலாம். தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் நடித்திருக்கும் நடிகர்களே பெரிய நடிகர்களாக கருதப்படுவார்கள்.

எனவே, எல்லா நடிகர்களுக்கும் அந்த ஆசை உண்டு. தீபாவளி, பொங்கல் இல்லையெனில் விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், கோடை விடுமுறை போன்ற விடுமுறை நாட்களை திட்டமிடுவார்கள். ஆனால், எல்லோருக்கும் தியேட்டர் கிடைக்கும் என சொல்ல முடியாது. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கு ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், சத்தியராஜ், பிரபு என எல்லோரின் படங்களும் வெளியாகும். எல்லோர் படங்களும் ஓடும்.

இதையும் படிங்க: ஆமா லோகேஷ் ஸ்டைல் கோட்டில் இருக்கு.. வெங்கட் பிரபு சொன்ன உண்மை..

ஆனால், கடந்த பல வருடங்களாகவே அப்படி நடப்பதில்லை. ஒரு பெரிய நடிகர் படம் வெளியானால் வேறு எந்த படமும் அன்று வெளியாகாது. அதற்கு காரணம் இப்போதெல்லாம் திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் உருவாவதால் போட்டிக்கு எந்த படமும் வரக்கூடாது என தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களே நினைக்கிறார்கள். ஏனெனில் வசூல் பாதிக்கும் என்பது அவர்களின் கணக்கு.

சூர்யா நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதில் முதல் பாகம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால், ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் வெளியாவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இது கங்குவாக படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ரஜினியோடு மோதுகிறாரா சூர்யா?.. அப்படி வந்தால் கங்குவா படம் நல்ல வசூலை பெறுமா? என பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகாது என சூர்யாவே அறிவித்துவிட்டார்.

ஆனால், சூர்யா செய்தது தவறு. வேட்டையனோடு அவர் மோதியிருக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபல யூடியூபர் புளூசட்ட மாறன் டிவிட்டர் பக்கத்தில் ‘ போட்டி என வந்துட்டா தில்லா மோதணும். ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதற்கு கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது. 2019 பொங்கல் ரிலீஸில் பேட்ட படத்துடன் மோதிய விஸ்வாசனம் பேட்ட படத்தி விட அதிக வசூலை பெற்றது. வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையும் படிங்க: மீண்டும் அந்த இயக்குனரா… அஜித் ரசிகர்களுக்கே இது வருத்தமான செய்திதான்… சும்மா இருக்கலாம்!..

Next Story