ஒரு பொண்ணு செத்து போச்சி!.. இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டீங்க!.. பொங்கும் பிரபலம்!...
இன்று வெளியாகியுள்ள புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்க்க ஆசைப்பட்ட அல்லு அர்ஜூன் ஹைதராபத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு போனார். அப்போது அல்லு அர்ஜூனை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி படம் பார்க்கப்போன ரேவதி(39) என்கிற பெண் மரணமடைந்தார்.
ஒருபக்கம், அல்லு அர்ஜூன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் புகைப்படங்களையும் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், அல்லு அர்ஜூனின் இந்த செயலை பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பெரிய நடிகர்கள் உங்கள் படத்தை முன்பே பலமுறை பிரிவ்யூ பார்த்து இருப்பீர்கள். பிறகு ஏன் இப்படி FDFS காண தியேட்டருக்கு வருகிறீர்கள்?.
போதுமான பாதுகாப்பை ஏற்பாடு செய்யாத திரையரங்க நிர்வாகம், ஆர்வக்கோளாறு ரசிகர்கள், பொறுப்பற்ற ஹீரோ என அனைவருமே அப்பெண்ணின் இறப்பிற்கு காரணம். சென்னையில் மல்டிப்ளக்ஸ் அல்லாத தியேட்டர்களிலும் இதே கூத்துதான். தனது காவியத்தை FDFS பார்க்க தியேட்டருக்கு வரும் ஹீரோக்களை கண்டு அவர்களை முற்றுகையிட்டு கத்துகிறது இந்த ஜாம்பி கும்பல்.
அவரும் வேகவேகமாக உள்ளே ஓடுகிறார். படிக்கட்டிலும் துரத்துகிறார்கள். வெளியே வரும்போது இன்னும் வெறித்தனம். ஓடிப்போய் காரில் ஏறிய பின்பும் காரை சுற்றி வெறித்தனமாக கத்துகிறார்கள். புஷ்பா 2 போல ஒரு அசம்பாவிதம் இங்கும் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்த கூத்தை தடுக்க வக்கில்லை. ஆனால் FDFS பப்ளிக் விமர்சனம், சோஷியல் மீடியா விமர்சனங்களை தடுக்க மட்டும் வருசக்கணக்கா ரூம் போட்டு யோசிப்பானுங்க. தியேட்டர் வளாகத்தில் இப்படியான கூத்துகளை தடை செய்ய அரசாங்கமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவாரம் கழித்துதான் விமர்சனம் செய்ய வேண்டும் என கூவுபவர்கள்.. தங்கள் படங்களை காண ஒருவாரம் கழித்துதான் தியேட்டருக்கு வரவேண்டுமென பருப்பு ஸ்டார்களுக்கு தடை விதிக்க துணிச்சல் உண்டா?’ என அவர் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: புஷ்பா 2 கொடுத்த ஹைப்புக்கு வொர்த்தா?.. படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம் இதோ!..