Cinema News
ரஜினியாக முடியல.. இப்ப அடுத்த விஜய் ஆகணுமா?!.. எஸ்.கே.வை சீண்டும் புளூசட்ட மாறன்..
Sivakarthikeyan: பொதுவாக சினிமாவில் ஒரு நடிகர் நடிப்பிலிருந்து விலகும்போதோ, அல்லது வயதாகிவிட்டாலோ அவரின் இடத்தை பிடிக்க பலரும் முயற்சி செய்வார்கள். ரஜினிக்கு 70 வயதுக்கும் மேல் ஆகிறது. எனவே, அவரது இடத்தை விஜய் பிடிக்க முயற்சி செய்கிறார் என்றார்கள். ரஜினியை விட அதிக சம்பளம், அதிக வசூல் என கணக்கு சொன்னார்கள்.
ஆனால், ஜெயிலர் மூலம் இன்னமும் நான்தான் ஒன் என நிரூபித்து காட்டினார் ரஜினி. ஒருபக்கம். விஜய் அரசியலுக்குப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்படுவதாக சொன்னார்கள். கோட் படத்தில் ‘நீங்க வேற வேலைக்கு போறீங்க. நீங்க போங்க. உங்க வேலையை நான் பாத்துக்கிறேன்’ என விஜயிடம் சிவகார்த்திகேயன் சொல்வது போல வசனமும் வருகிறது.
எனவே, பலரும் இதுபற்றி பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில், பிரபல யுடியூபர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் இப்படி பதிவிட்டிருக்கிறார். இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு 50 வருடமும், விஜயும் 30 வருடங்களும் ஆனது. காதல், செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என பல ஜார்னர்களில் வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜய்.
அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள். நீங்கள் முதலில் ரஜினியாக ஆசைப்பட்டு ரஜினி முருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என உங்கள் படங்களுக்கு தலைப்பு வைத்தீர்கள். ஜெயிலரில் ரஜினியின் மகன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டும் அது நடக்கவில்லை. ரஜினியை பின்பற்றினால் இளம் தலைமுறைகளை ஈர்க்க முடியாது என்பதை புரிந்து இப்போது அடுத்த விஜய் ஆக முயற்சி செய்கிறீர்கள்.
நீங்கள் இதுவரை நடித்தது வெறும் காமெடி படங்கள் மட்டுமே. சீரியஸாக நீங்கள் நடித்த ஹீரோ, வேலைக்காரன் போன்ற படங்கள் ஓடவில்லை. ரஜினி- கமல் போல, விஜய் – அஜித் இடங்களும் இனி யாருக்கும் கிடைக்காது. விஜய் அரசியலுக்கு போனாலும் சினிமாவில் அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. எனவே, இருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்வதே சாமர்த்தியம்.
குட்டி தல, சின்ன தள போன்ற ஆசைகளில் அர்த்தமில்லை’ என பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… இதைத் தானே இவ்ளோ நேரமும் எதிர்பார்த்தோம்..!