நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அதன்பின் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கினார்.
நடிகை தேவயானியை காதல் திருமணம் செய்து கொண்டவர் இவர்.
ஒரு கட்டத்தில் இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் நடிக்க துவங்கினார் .திருமதி தமிழ் படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் ஒரு காமெடி காட்சியில் நடித்திருந்தார். அதன்பின் கடுகு என்கிற படத்தில் நடித்தார்.
கடந்த பல வருடங்களாகவே ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் ராஜகுமாரன் ‘கமல்ஹாசன் ஒரு நடிகரே இல்லை.. மகேந்திரன் ஒரு இயக்குனரே இல்லை.. விக்ரமுக்கு நடிக்கவே தெரியாது..’ என்கிற ரீதியில் பல சர்ச்சையான கருத்துக்களை கூறிவருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை போட்டு பொளந்தார்கள். அதன்பின் ‘நான் அப்படி சொல்லவில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் ராஜகுமாரன் ‘துருவ் விக்ரம் எத்தனை படம் வேணா நடிக்கட்டும்.. ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் போல ஒரு படத்தில் நடித்தால்தான் மக்களிடம் போய் சேர முடியும்’ என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ‘விண்ணுக்கு மண்ணுக்கும் என்கிற ஒரு மொக்கை படத்தை எடுத்து விட்டு தொடர்ந்து பில்டப் செய்து வருகிறார்.. விக்ரமின் மார்க்கெட்டை பணால் ஆக்கிய காவியங்களில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படமும் ஒன்று.. பைசன் படம் மூலம் துருவ் மக்களிடம் சென்று சேர்ந்து விட்டார்.. நீங்க பூமர் மாதிரி எதையாவது பேசாதீங்க’ என பதிவிட்டிருக்கிறார்.
