இமான் வருவதற்குள் போய்விட்டார் அமரன்!.. எஸ்.கே.வை கலாய்த்த பிரபலம்!.. இது செம நக்கல்யா!..

Published on: April 19, 2024
sivakarthikeyan
---Advertisement---

விஜய் டிவியில் ஆங்கராக இருந்து அதன்பின் சினிமாவில் நுழைந்து குறுகிய காலகட்டத்திலேயே உச்சத்திற்கு போனவர் சிவகார்த்திகேயன். இவரை பின்பற்றி பலரும் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தனர். அதில், கவின் மட்டுமே கொஞ்சம் தேறினார். மற்றவர்களுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறியது அவருக்கு முன்பே சினிமாவுக்கு வந்த பல நடிகர்கள் பொறாமைப்பட்டனர். ஆனாலும், அவரின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. அதேநேரம், சொந்தமாக படம் தயாரித்து கடனில் சிக்கி சுமார் 100 கோடிக்கு கடனாளி ஆனார்.

இதையும் படிங்க: விஜயோட பைக் டிரைவர்.. ஒரே பட்டன் அஜித்!.. ஒருத்தர விடாம பங்கம் பண்ணும் புளூசட்ட மாறன்..

அதனால், அவரின் படங்கள் ஒவ்வொரு முறையும் வெளியாகும்போதும் கடன் பிரச்சனை அவரின் கழுத்தை பிடித்தது. எனவே, சில படங்களில் நடித்த அவரிம் சம்பளம் அப்படியே கடனுக்கு போனது. அதோடு, ஒருபககம் இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை பிறந்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் என்கிற புகார் எழுந்தது.

’சிவகார்த்திகேயனை நான் மன்னிக்க மாட்டேன். இனி எந்த ஜென்மத்திலும் அவரின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்’ என இமான் கொடுத்த பேட்டி திரையுகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த வீடியோவை நீக்கவும், அதன் ரீச்சை குறைக்கவும் எஸ்.கே. இணைய கூலிகளை பயன்படுத்தினார் எனவும் பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது! வேற மாதிரி ஆயிடும்.. பயில்வானை மூக்குடைத்த விஷால்

அதோடு, இமான் விஷயத்தில் சிவகார்த்திகேயன் செய்தது தவறு என தொடர்ந்து மாறன் விமர்சித்து வந்தார். இந்நிலையில், இன்று ஓட்டு போடுவதற்காக சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘வாக்கு நமது உரிமை.. ஓட்டு போடுவது நமது கடமை’ என தத்துவம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், புளூசட்ட மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இமான் வருவதற்குள் வேகமாக ஓட்டு போட்டுவிட்டு போய்விட்டார் அமரன்’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘யோவ் உனக்கு நக்கல் அதிகம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.