எனக்கும் ஒரு ஃபேன் பாய் கதை ரெடி பண்ணிட்டு வாங்க!. ரஜினியை பங்கம் செய்யும் மாறன்..

by சிவா |   ( Updated:2025-04-15 01:02:07  )
adhik
X

நடிகர் ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட் என கேள்விப்பட்டால் உடனே அந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைப்பார். அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என எல்லாரும் போவார்கள். படத்தில் அவர் எதையெல்லாம் ரசித்தாரோ அது எல்லாவற்றையும் சிலாகித்து பேசுவார்.

அதில், ‘இந்த கேரக்டர் சூப்பரா இருந்தது. என்னை கேட்டா நானே நடிச்சிருப்பேனே’ என சொல்லி அவர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுப்பார். ஜிகர்தண்டா படம் வெளியான போது அப்படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்பாராஜை அழைத்து ‘பாபி சிம்ஹா கேரக்டர் என்கிட்ட கேட்டிருந்தா நானே நடிச்சிருப்பேன்’ என கூறினார்.

கடந்த பல வருடங்களாகவே இப்படி பல படங்களை பார்த்துவிட்டு படகுழுவை நேரில் அழைத்து பாராட்டும் பழக்கம் ரஜினிக்கு இருக்கிறது. டிராகன் படம் பார்த்துவிட்டும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரை அழைத்து பாராட்டியிருந்தார். இப்படி படக்குழுவினரை பாராட்டும்போது அவர்களோடு புகைப்படமும் எடுக்க சொல்வார். அந்த புகைப்படங்களை படக்குழுவினர் தங்களின் சமூகவலைத்தளங்களில் மகிழ்ச்சியோடு பகிர்வதும் உண்டு.

அதேபோல், அந்த இயக்குனரிடம் ‘எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என சொல்லியும் உசுப்பிவிடுவார். அப்படி ரஜினி சொன்னதை நம்பி சில இயக்குனர்கள் சில வருடங்களை வீணடித்திருக்கிறார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து ‘எனக்கு ஒரு கதை பண்ணுங்க’ என்றார் ரஜினி. இதற்காக சில மாதங்கள் எடுத்துக்கொண்டார் தேசிங்கு. ஆனால், எதையோ காரணம் சொல்லி ‘நீங்க வேற ஹீரோவை வச்சி படமெடுங்க.. பின்னாடி பார்ப்போம்’ என சொல்லி அனுப்பிவிட்டார். இப்போது அந்த கதையில்தான் சிம்பு நடிக்கவிருக்கிறார்.

அதேபோல், டான் பட இயக்குனர் சிபி சக்ரவத்தியை அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்க என சொல்லி சில மாதங்கள் அவரை காத்திருக்க வைத்து அனுப்பிவிட்டார். ரஜினியின் இந்த செயலை சினிமா விமர்சகர் புளுசட்ட மாறன் தொடர்ந்து நக்கலடித்து வருகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.

எனவே, படம் பார்த்தேன். செம மாஸா இருக்கு. வீட்டுக்கு வாங்க. உங்களை பாராடுற போட்டோவை மீடியாவுக்கு அனுப்பனும். அப்படியே எனக்கு ஒரு ஃபேன் பாய் சம்பவம் கதையை ரெடி பண்ணிட்டு வாங்க’ என ரஜினி பேசுவது போல ஒரு மீம்ஸை போட்டு கலாய்த்திருக்கிறார்.

Next Story