தளபதி 69க்கு சம்பளம் 275 கோடியா?!. இது விஜய்க்கு தெரியுமா?... கலாய்க்கும் பிரபலம்!...
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் இவர். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. துவக்கம் முதல் காதல் கலந்த ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியவர். குறிப்பாக குழந்தைகள் விரும்பும் நடிகராக இருக்கிறார்.
விஜயின் பாடல் காட்சிகளை குழந்தைகளும் பெரிதாக விரும்புகிறார்கள். அதற்கு காரணம் விஜய் படங்களில் இடம் பெறும் துள்ளலான பாடல்கள்தான். சமீபத்தில் விஜயின் கோட் படம் வெளியானது. இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் மற்ற ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதையும் படிங்க: தூம்4 படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோவா?.. மிரட்டலா இருக்குமே!
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படம் மற்ற மாநிலங்களில் ஹிட் அடிக்கவில்லை தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறரர். இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
இது விஜயின் 69வது திரைப்படமாகும். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கவிருக்கிறார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் சொல்லி இருப்பதால் இது அவரின் கடைசிப்படமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே, இப்படத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். மேலும், விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்தக்கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த படத்திற்கு விஜய்க்கு 275 கோடி சம்பளம் என சில விஜய் ரசிகர்கள் கொளுத்தி போட்டிருக்கிறார்கள்.
கோட் படத்திற்கு அவருக்கு 200 கோடி சம்பளம் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவே சொல்லி இருந்தார். எனவே, இதை பலரும் நம்பவும் துவங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல யுடியூபர் புளூசட்ட மாறன் ‘இது விஜய்க்கு தெரியுமா?’ என பதிவிட்டு கிண்டலடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்