மன்னிப்பு கேட்காம பேச்சுவார்த்தை நடத்துறாரு விஜய்!.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் புளூசட்ட மாறன்!..

vijay
நடிகர் விஜய்க்கு ரசிகர் கூட்டம் அதிகம். குறிப்பாக 10 வயது முதல் 20 வயது வரையிலான ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்கள் எப்போதும் விஜய் விஷயத்தில் மிகவும் ஆர்வக்கோளாறுடன் நடந்துகொள்வார்கள். இவர்களை பலரும் அனில் குஞ்சுகள் என கிண்டலாக அழைப்பார்கள்.
இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் விஜய் மீது அதிக கவனம் ஏற்பட்டிருக்கிறது. பல வருடங்களாக தன்னுடைய ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்களையே இப்போது அரசியல் கட்சியிலும் நிர்வாகிகளாக விஜய் நியமித்திருக்கிறார். தன்னுடைய ரசிகர்கள் தனக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்பியே அரசியல் களத்திற்கும் அவர் வந்திருக்கிறார்.
அதோடு, திமுகவை பிடிக்காத மக்களின் ஓட்டுக்களும் நமக்கு கிடைக்கும் என அவர் நம்புகிறார். அவரின் ரசிகர்களில் நிறைய பேர் 20 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்பதால் அவர்களின் அட்ராசிட்டி மிகவும் அதிகமாகவே இருக்கும். விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடம் தெரிந்தால் அங்கே சென்று விஜயை எப்படியாவது பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

விஜயின் லியோ பட டிரெய்லர் வீடியோ ரோகிணி தியேட்டரில் வெளியானபோது அங்கிருந்த சேரின் மீது ஏறி நின்று பல சேர்களை சேதம் ஆக்கினார்கள். விஜய் அதை கண்டிக்கவும் இல்லை. அந்த தியேட்டர் அதிபருக்கு நஷ்ட ஈடும் கொடுக்கவில்லை. சமீபத்தில் முகவர் கருத்தரங்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் கோவை சென்றிருந்த போது, விமான நிலையத்தை ரசிகர்கள் சேதம் செய்தனர். மேலும், விஜயின் வேனின் மீது சில ரசிகர்கள் திடிரென குதித்தார்கள். இதைப்பார்த்தே விஜயே அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். கோவை தங்கம்ஸ்.. கொங்கு தங்கம்ஸ்.. தயவு செஞ்சி இனிமே மரத்துல இருந்து குதிக்காதீங்க. சரியா?. என்கிற ரேஞ்சுக்கு ரசிகர்களிடம் கெஞ்சாத குறையாக கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், ரோகினி தியேட்டரில் இருக்கைகள் சேதம், பவுன்சரால் தாக்கப்பட்ட ரிப்போர்ட்டர், விமான நிலையத்தில் சேதம். இதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்காம இங்க பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காரு’ என புளூசட்ட மாறன் மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார்.