அதுக்குள்ள 25 நாள் போஸ்டரா?.. அந்தகன் படத்தை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!...

#image_title
Anthagan: வைகாசி பொறந்தாச்சி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பிரசாந்த். இவர் நடிகர் தியாகராஜனின் மகன். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து காதல் இளவரசன் என்கிற பட்டத்தையும் பெற்றார் பிரசாந்த். இவருக்கு பெண் ரசிகைகளும் உண்டானார்கள்.
எல்லோருக்கும் பிடித்த நடிகராக வலம் வந்தார் பிரசாந்த். ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராயுடன் ஜோடி போட்டு நடித்தார். இது அப்போது முன்னணியில் இருந்த பல நடிகர்களுக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. அவ்வளவு ஏன்?.. ரஜினிக்கே அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த படம் வெளியாகி 12 வருடங்கள் கழித்தே ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டார் ரஜினி.
இதையும் படிங்க: கொட்டுக்காளி தோத்து போனதுக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான்!.. அட என்னப்பா சொல்றீங்க?!..
இப்படி டாப்பில் இருந்த பிரசாந்தின் மார்க்கெட் அவரின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனயால் சரிந்து போனது. சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் பிரசாந்த். அதன்பின் மீண்டும் நடிக்கவந்தாலும் பெரிய வெற்றிப்படங்கள் அமையவில்லை. அவ்வப்போது அவரின் நடிப்பில் படங்கள் வெளியாகி வந்தது.
ஹிந்தியில் ஹிட் அடித்த அந்தாதூண் படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் நடித்தார் பிரசாந்த். இந்த படத்தை அவரின் அப்பா தியாகராஜனே தயாரித்து இயக்கினார். இப்படம் கடந்த ஆகஸ்டு 9ம் தேதி வெளியானது. பல வருடங்களுக்கு பின் இப்படம் பிரசாந்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

#image_title
இந்நிலையில், கடந்த 26ம் தேதி இமாலய வெற்றி 25வது நாள் என்கிற போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புளூசட்ட மாறன் ‘அந்தகன் படம் வெளியானது ஆகஸ்டு 9. ஆனால், 17வது நாளிலேயே 25வது நாள் என போஸ்டர் விட்டிருக்கிறார்கள். அந்தகன் போஸ்டர் என்றாலே ஜாலிதான்’ என நக்கலடித்திருக்கிறார்.
சினிமாவில் அப்படித்தான். படம் வெளியான அன்றே வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடுவார்கள். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்பார்கள். ஆனால், தியேட்டரில் போய் பார்த்தால் ஒரு குடும்பம் கூட இருக்காது. இப்படி இல்லாத ஒன்று இருப்பது போல சொல்லி விளம்பரம் செய்வது பல வருடங்களாக நடக்கும் ஒன்றுதான்.
இதையும் படிங்க: ‘அசுரன்’ படத்திற்காக மாரி செஞ்சத மறக்கவே முடியாது.. வெற்றிமாறன் நெகிழ்ச்சி..