கூலி கிளைமேக்ஸில் இப்படிதான் வடை சுடுவார் லோகேஷ்!.. பங்கம் செய்த புளூசட்ட மாறன்!...

by சிவா |
coolie
X

#image_title

Coolie: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். இப்படத்தின் மேக்கிங்கை பார்த்து இயக்குனர்களே அவரை பாராட்டியிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தை பார்த்துவிட்டுதான் லோகேஷுக்கு படம் கொடுத்தார் விஜய்.

மாநகரம் படத்திற்கு பின் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார் லோகேஷ். இந்த 3 படங்களுமே ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் பெரிய லாபத்தை கொடுத்தது.

இதையும் படிங்க: அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்த கோட்… 3 மணி நேரம் போறதே தெரியாதாம்..!

விக்ரம் படத்திற்கு பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ். தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் எந்த படத்திற்கும் வராத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டது. இந்த படத்தை பற்றியே எல்லோரும் பேசினார்கள். ஆனால், இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். லோகேஷ் கனகராஜின் பெரும்பாலான படங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் படத்தில் ஒரு முக்கிய காரணியாக வரும். விக்ரம் படத்தில் கூட போதைப் பொருளை அழிக்கவே கமல் போராடுகிறார் என்பது போல படத்தின் இறுதிக்காட்சியில் காட்டப்பட்டிருக்கும். Drug free society என வசனம் பேசுவார் கமல்.

படம் முழுக்க போதைப்பொருளை காட்டிவிட்டு படத்தின் இறுதியில் அறிவுரை சொல்கிறார் என்கிற விமர்சனமும் லோகேஷ் மீது இருக்கிறது. விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் ரோலக்ஸ் வேடத்தில் வரும் சூர்யா செய்யும் விஷயங்கள் இளைஞர்களை சீரழிக்கும் என சினிமா விமர்சகர்கள் பலரும் சொன்னார்கள்.

coolie

#image_title

இப்போது இயக்கி வரும் கூலி படத்திலும் என்ன வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. சமீபத்தில் மலையாள நடிகர் ஷோபின் கூலி படத்தில் தயாள் என்கிற வேடத்தில் நடிக்கிறார் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டர் ஷோபின் புகைப்பிடிப்பது போல உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புளூசட்ட மாறன் ‘கிளைமேக்ஸ் வடை - Tobacco free society -ஐ உருவாக்குவோம்’ என பதிவிட்டு கிண்டலடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: டிக்கெட் ஓபன் செஞ்ச முதல் நாளே கோட்டுக்கு பஞ்சாயத்து… ஒன்னு கூடிட்டாங்கப்பா!

Next Story