ஹாலிவுட்லயே கூப்பிட்டாங்க!.. கெத்து காட்டிய அட்லி.. மொக்கை பண்ணிய புளூசட்ட மாறன்..

Bluesatta maran: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அட்லீ. ஷங்கரிடம் வேலை செய்ததாலோ என்னவோ இவரும் அதிக பட்ஜெட்டில் மட்டுமே படங்களை இயக்கி வருகிறார். ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்களை போலவே இவரின் படங்கள் இருக்கிறது என்பதுதான் இவர் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு.

இவர் இயக்கிய முதல் படம் ராஜா ராணி. மணிரத்தினம் இயக்கிய மௌன ராகத்தை பட்டி டிங்கரிங் செய்து எடுத்தார். அதன்பின் விஜயகாந்தின் சத்ரியன் படத்தை தழுவி தெறி படம் எடுத்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை தழுவி மெர்சல் எடுத்தார். சில ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலிருந்து காட்சிகளை உருவி பிகில் எடுத்தார். அதேநேரம், வெற்றிக்கு தேவையான திரைக்கதை அமைத்து படத்தை ஹிட் செய்து விடுவார்.

இதையும் படிங்க: ஜவானில் அட்லி செஞ்ச வேலை.. மூடி மறச்சி வெத்து பந்தா காட்டும் ஷாருக்கான்…

இதனால் இவர் சமூகவலைத்தளங்களில் ட்டோல் செய்யப்படுவதுண்டு. ஆனால், அதையெல்லாம் இவர் கண்டு கொள்ளவதில்லை. கேட்டால் இக்னோர் நெகட்டிவிட்டி என மேடையில் பேசுவார். விஜயை வைத்து 3 படங்கள் இயக்கியதால் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் அழைக்க அங்கு சென்றார்.

தமிழில் வெளிவந்த சில படங்களின் கதைகளை போட்டு மாவு பிசைந்து சப்பாத்தி செய்து ஜவான் என உருவாக்கினார். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசைமமைத்திருந்தார். செப்டம்பர் 7ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஷாருக்கான் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.

இதையும் படிங்க: இவரு அட்லிக்கே அண்ணனா இருப்பாரு போல!.. லியோ பட போஸ்டர்களை எங்கே இருந்து சுட்டு இருக்காங்க பாருங்க!..

ஆனால், இந்த படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘இந்த சீன் அந்த படத்துல வந்துச்சே’. அந்த சீன் இந்த படத்துல வந்துச்சே’ என பொறி தட்டியது. ஜவான் படத்தில் 23 தமிழ் படங்களை பார்த்தோம் என படம் பார்த்துவிட்டு வந்த சில ரசிகர்கள் கிண்டலடித்த வீடியோவும் வைரலானது. ஆனால், ஜவான் படம் ரூ.900 கோடி வசூலை தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அட்லீ ‘ஜவான் படம் ஹிட் அடித்திருப்பதால் எனக்கு ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது’ என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பிரபல யூடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் தனது எக்ஸ் தளத்தில் ‘இங்க இருந்து எடுக்க வேணாம். இங்க வந்தே எடுங்கன்னு சொன்னாங்க. அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது' என நக்கலடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு டிக்கெட்டுக்கு 23 படம் காட்டுறாரு!. ஏன் அட்லியை திட்றீங்க!?.. ட்ரோல் ஆகும் வைரல் வீடியோ!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it