Connect with us
dhanush

latest news

கோலிவுட் ஹீரோக்களின் செண்டிமெண்ட் ஆயுதங்கள் இதுதான்!.. போட்டு பொளக்கும் புளூசட்டமாறன்…

சினிமா என்பதே இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவதுதான். அந்த சினிமாவில் தொடர்ந்து நடிப்பதாலோ என்னவோ பல நடிகர்களுக்கும் ஒரு போலி முகம் வந்துவிடும். மனதிற்குள் எவ்வளவு வன்மம் இருந்தாலும் வெளியே நல்லவர்கள் போலவே காட்டிக்கொள்வார்கள். மேடையில் குட்டிக்கதை சொல்வார்கள். அன்பை பரப்புவோம்.. வெறுப்பு வேண்டாம் என்பார்கள்.. ஆனால், மனதிற்குள் அவ்வளவு வெறுப்பை வைத்திருப்பார்கள்.

எந்த தவறு செய்தாலும் ஊடகங்களிலோ, செய்தியாளர்களிடமோ, அவர்களின் ரசிகர்களிடமோ கூட உண்மையை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். நான் கஷ்டப்பட்டு வந்தவன்.. என் திறமையால் வளர்ந்தேன்.. என் மீது வீண் பழி போடுகிறார்கள்.. கடவுள் பார்த்துக்கொள்வான் என உருட்டுவார்கள். ஏனெனில், உண்மையை ஒப்புக்கொண்டால் இமேஜ் போய்விடும் என்பதே முக்கிய காரணம்.

இதையும் படிங்க: நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…

சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்ததாக இசையமைப்பாளர் இமான் புகார் சொன்னார். அதுபற்றி எந்த விளக்கமும் சிவகார்த்திகேயன் அளிக்கவில்லை. அதேபோல், மனைவியை விவாகரத்து செய்தால் உண்மையான காரணத்தை சொல்லவே மாட்டார்கள். இதில், ஜெயம் ரவி மட்டுமே விதிவிலக்கு.

Sivakarthikeyan

தற்போது நயன்தாராவின் கோபத்திற்கு தனுஷ் ஆளாகியிருக்கிறார். அவரின் திருமணம் தொடர்பான வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகவிருந்தது. அதில், தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் 3 நிமிட வீடியோ இடம் பெற திட்டமிட்டு தனுஷிடன் என்.ஓ.சி கேட்டார் நயன்தாரா.

ஆனால், 2 வருடங்கள் ஆகியும் தனுஷ் என்.ஓ.சி கொடுக்கவில்லை. அதோடு, அந்த 3 நிமிட வீடியோவுக்கு 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிருக்கிறார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை கிழிகிழியென கிழித்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். முகமூடி போட்டுக்கொண்டு ஏன் வாழ்கிறீர்கள்?. நான் சொன்னதை திரித்து அடுத்த ஆடியோ லான்ச் விழாவில் பஞ்ச் வசனத்தோடு பேசுவீர்கள்’ என காட்டமாக கூறியிருக்கிறார்.

#image_title

இந்நிலையில், நயன் சொல்வது உண்மைதான் என அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள புளூசட்ட மாறன் பதிவிட்டுள்ளதாவது:

கோலிவுட் நடிகர்கள் செய்த தப்பை ஒத்துக்கவே மாட்டாங்க. ஆடியோ லாஞ்ச்ல ஆத்துவாங்க பாருங்க சென்டிமென்ட் டீயை.. ஆத்தாடி!! நம்மாளு இப்பவே ஸ்க்ரிப்டை ரெடி பண்ணி இருப்பாரு இப்படி.. ‘ஒருவேளை சோத்துக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். எல்லா சதிகளையும், துரோகங்களையும் தாண்டி இப்ப வளந்து நிக்கறேன். அதுக்கு காரணம் என் உயிரினும் மேலான ரசிகர்கள் நீங்கதான். என் வளர்ச்சி பிடிக்காம வதந்தி பரப்பறாங்க.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என குட்டிக்கதை சொல்லி முடித்துவிட்டு ‘அதனால எதை பத்தியும் கவலைப்படாம முன்னேறி போய்கிட்டே இருக்கணும். வெறுப்பு வேண்டாம். அன்பை விதைப்போம். ஓம் நமச்சிவாய’ என கலாய்த்திருக்கிறார். மேலும், கோலிவுட் ஹீரோக்களின் பிரபல சென்டிமென்ட் ஆயுதங்கள் என பதிவிட்டு:

பணம் கொடுத்தவர்: சார்.. வாங்குன கடனை எப்பதான் திருப்பி தருவீங்க?

ஹீரோ: என் வளர்ச்சி உங்களுக்கு புடிக்கலையா?

ரிப்போர்ட்டர்: சார்.. அந்த மியூசிக் டைரக்டர் வீட்ல பூந்து கசமுசா பண்ணீங்களாமே?

ஹீரோ: எந்த சினிமா பின்னணியும் இல்லாம அடிபட்டு மேல வந்துருக்கேன்.

ரசிகர்: என்ன தலைவா.‌. இவ்வளவு காட்டு மொக்கை படத்துல நடிச்சிருக்க?

ஹீரோ: இக்னோர் நெகடிவிட்டி. உலகமே அன்பால் இயங்குது. பாசிடிவா பேசுங்க.

ரிப்போர்ட்டர்: போன படம் பெரிய ஃப்ளாப் ஆகிடுச்சே. .

ஹீரோ: ஒரு ஊர்ல ஒரு கழுகு இருந்ததாம். அது ஒருநாள்.. தாளிக்க கடுகு வாங்க கடைக்கி போச்சாம்.

பப்ளிக்: கடைசி வரைக்கும் ஒருத்தனாவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்றானா பாத்தியா.. அட நாரைகளா.

என பதிவிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in latest news

To Top