லால் சலாம் படம் ஹிட்டாகணுமாம்.. காப்பாத்துங்க மக்களே!.. கலாய்க்கும் புளூசட்ட மாறன்...
Lal Salaam: ஜெயிலர் படம் கொடுத்த மெகா ஹிட்டில் உற்சாகமாக 3 படங்களை புக் செய்தார் ரஜினி. பொதுவாக ஒரு படத்திற்கு நடுவே சில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டுத்தான் ரஜினி அடுத்த படத்தை துவங்குவார். ஆனால், ஜெயிலர் படத்திற்கு பின் 3 படங்களில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி.
இதில், மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் கவுரவ வேடம். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படம் என பரபரப்பு காட்டினார் ரஜினி. லால் சலாம் கெஸ்ட் ரோல் என்பதால் படம் வேகமாக முடிந்து வருகிற 9ம் தேதி படம் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: அஜித்தையும் விட்டு வைக்காத மிருனள் தாக்கூர்!.. எல்லா பக்கமும் ரவுண்டு கட்டுறாரே!…
எனவே, இப்படம் தொடர்பான புரமோஷன் வேலைகளும் நடந்து வருகிறது. சமீபத்தில்தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினி கலந்துகொண்டார். அந்த மேடையில்தான் ‘நான் சொன்ன காக்கா - கழுகு கதை விஜயை மனதில் வைத்து இல்லை. பலரும் அப்படி திசை திருப்பிவிட்டனர். விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவரின் வளர்ச்சியில் எனக்கும் அக்கறை உண்டு’ என பேசினார்.
இதுவும் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. ரஜினி விஜயைத்தான் சொன்னார் என நினைத்த விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இது லால் சலாம் படத்தின் வசூலை பாதிக்கும் என நினைத்தே ரஜினி அந்த மேடையில் அப்படி பேசியதாக சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறினர்.
இதையும் படிங்க: வரீங்களா? இல்லையா? விஷால் செய்வது மட்டுமல்ல சொல்றதை கூட குழப்பிவிடுறாரே?
ஒருபக்கம், சினிமாவில் மதநல்லிணக்கம் பேசும் ரஜினி நிஜவாவில் அப்படி இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக எப்பவும் பேசமாட்டார் என்றே பரவலாக ஒரு கருத்து உள்ளது. இந்த கருத்தை தொடர்ந்து சொல்லி வருபவர் பிரபல விமர்சகர் புளூசட்டமாறன்தான். இந்நிலையில், லால் சலாம் படம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ‘மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே. லால் சலாம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்துள்ள புளூசட்டைமாறன் ‘லால் சலாம் படத்தை ஹிட் ஆக்க வேண்டுகிறார்.. காப்பாத்துங்க மக்களே’ என நக்கல் அடித்துள்ளார். இதில் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.
இதையும் படிங்க: நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!