Connect with us
trisha

Cinema News

சினிமாவில்தான் வீரமெல்லாம்.. நிஜத்தில் அட்டக்கத்திகள்!.. நடிகர்களை விளாசிய பிரபலம்…

நடிகை திரிஷா பற்றி மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. லியோ படத்தில் திரிஷா நடிக்கிறார் என்றதும் எனக்கும், அவருக்கும் ரேப் காட்சியெல்லாம் இருக்கும்.. திரிஷாவை அப்படியே தூக்கிட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ என மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.

மன்சூர் அலிகான் பேசியிருப்பது அறுவறுப்பான செயல்.. அசிங்கம்.. நல்லவேளை இதுவரை அவருடன் நடித்தது இல்லை. இனிமேலும் நடிக்க மாட்டேன்.. அவர் மனித இனத்திற்கே அவமானம்’ என திரிஷா டிவிட்டரில் பொங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து மாளவிகா மோகனன் உட்பட பலரும் மன்சூர் அலிகானை கண்டித்திருந்தனர்.

இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?!. முட்டா கூ….ளா?!.. வெடித்த மன்சூர் அலிகான்!..

மன்சூர் அலிகான் பேசியது தவறு. அவரை நான் கண்டிக்கிறேன் என லோகேஷ் கனகராஜும் டிவிட் போட பற்றிக்கொண்டது. இதை கையிலெடுத்த நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். விரைவில் மன்சூர் அலிகான் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நான் பேசியதில் தவறும் ஏதுமில்லை. சினிமாவில் ரேப் சீன் என்றால் உண்மையாகவே ரேப் செய்வார்களா?.. நடிப்பார்கள் அவ்வளவுதான். அதைத்தான் நான் சொன்னேன். வேண்டுமென்றே என்னை டார்கெட் செய்கிறார்கள். நான் இயக்கி நடித்துள்ள சரக்கு படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்காக இதை செய்கின்றனர். என்னுடைய விளக்கத்தை கேட்காமலயே நடிகர் சங்கர் என்னை கண்டித்திருக்கிறது. அடிப்படை அறிவு கூட இல்லையா?.. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என மன்சூர் அலிகானும் பொங்கியிருந்தார்

இதையும் படிங்க: ரஜினி பேசலாம்.. மன்சூர் அலிகான் பேசக்கூடாதா?!.. திரிஷா விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை..

இந்நிலையில், இது தொடர்பாக நடிகைகள் மட்டுமே பேசுகிறார்கள்.. திரிஷாவுடன் நடித்த நடிகர்கள் யாரும் மன்சூர் அலிகானை கண்டிக்கவில்லை என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் தமிழ் சினிமா நடிகர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

blue

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இங்குள்ள நடிகர்கள் தீபாவளி கொழுக்கட்டையை வாயில் இருந்தும் இன்னும் எடுக்கவில்லை. சினிமாவில் மட்டுமே பெண்களை காப்பாற்றும் அட்டைக்கத்திகள் இவர்கள். கேட்டால் நடிகர் சங்கம் கண்டித்துவிட்டது என்பார்கள். உங்களால் தனியாக கண்டனம் தெரிவிக்க முடியாதா?.. உங்களோடு நடித்த நடிகைக்கே குரல் தர வக்கற்ற உங்களுக்கு எதற்கு அரசியல் ஆசை?. மேடைகளிலும், பேட்டிகளிலும், திரைப்படங்களிலும் எதற்கு உத்தமன் வேடம்?’ என சரமாரியாக கேள்விகளை அடுக்கியுள்ளார்.

லியோ படத்தில் விஜயுடன் திரிஷா நடித்திருந்த நிலையில், புளூசட்டமாறன் விஜயைத்தான் அதிகமாக இதில் திட்டியிருக்கிறார் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: த்ரிஷாவை வரவச்சு இத செய்வேன்! லோகேஷும் விஜயும் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்ல – மன்சூர் அலிகான் பகீர் பேட்டி

google news
Continue Reading

More in Cinema News

To Top