1960களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து சுதா கொங்காரா இயக்கியிருக்கும் திரைப்படம்தான் பராசக்தி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், அதர்வா ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார், இந்த திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
ஒரு நல்ல கதையை எடுத்து தவறான திரைக்ககதையை அமைத்து சுதாகொங்கரா இயக்கியிருக்கிறார்… படம் போர் என விமர்சனங்கள் வந்தது. எனவே இந்த படம் ரசிகர்களிடம் ஒட்டவில்லை.. ஒருபக்கம் விஜய் ரசிகர்களும் இந்த படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.. ஆனால் படம் இரண்டு நாளில் 50 கோடி வசூல் செய்துவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் நேற்று அறிவித்தார்.. ஆனால் அதை யாரும் நம்பவில்லை.

ஒருபக்கம் சிவகார்த்திகேயனை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் மதராஸி மற்றும் பராசக்தி இரண்டு படமும் காலி என ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார். பராசக்தி தொடர்பாக ஏற்கனவே இவர் வெளியிட்ட விமர்சன வீடியோவிலும் இந்த படத்தை பங்கம் செய்திருந்தார்.
ஒரு ரவுடி, போலீஸ் கதையின் இடையில் ஹிந்தி எதிர்ப்பை காட்டுகிறார்கள்.. ஹிந்தியை எதிர்த்து போராட்டம் செய்யும் ஹீரோ கதாநாயகியிம் சென்று தெலுங்கு கற்றுக் கொள்கிறார்.. சக்கரபொங்கலில் ரசம் கலந்து சாப்பிட்டது போல இருக்கிற படம்’ என்றெல்லாம் நக்கலடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



