Cinema News
Kanguva: கங்குவா படத்துக்காக சுடப்பட்ட மொத்த வடைகள்!.. இப்படி போட்டு பொளக்குறாரே மாறன்
Kanguva: ஒரு படத்தின் வெற்றிக்கு படக்குழு செய்யும் புரமோஷன் என்பது மிகவும் முக்கியம்தான். ஆனால், சில சமயம் அதுவே படத்திற்கு எதிராக திரும்பிவிடும். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் படத்திற்கு புரமோஷனே செய்யப்படவில்லை. அந்த படமும் ஓடவில்லை. அதேநேரம், அதிக அளவில் புரமோஷன் செய்தால் மட்டுமே ஒரு படம் ஓடிவிடும் எனவும் சொல்ல முடியாது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாக நடித்து வெளியான இந்தியன் 2 படத்திற்க்கு மாதக்கணக்கில் புரமோஷன் செய்தார்கள். கமல், சித்தார்த், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பல ஊர்களுக்கும் சென்று செய்தியாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்து பேசி படத்தை புரமோட் செய்தார்கள்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்துல பாசிட்டிவ்ஸ் விட நெகடிவ்ஸ் அதிகமா இருக்கே?!… இப்படி சாய்ச்சு புட்டிங்களேப்பா!…
ஆனால், படம் வெளியாகி ட்ரோலில் சிக்கியது. ஏனெனில், அப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் இப்படத்தை வச்சு செய்தனர். அதோடு, இந்தியன் 3 படத்தை தியேட்டரில் வெளியிட்டால் ஓடாது என முடிவுக்கு வந்து நேரிடையாக ஓடிடியில் வெளியிடலாம் எனவும் லைக்கா நிறுவனம் முடிவெடுத்ததாக சொல்லப்பட்டது.
தற்போது கங்குவா படமும் ட்ரோலில் சிக்கியிருக்கிறது. அதற்கு காரணம் இந்த படத்திற்கு படக்குழு கொடுத்த ஓவர் பில்டப்தான். படத்தில் சூர்யா, சண்டை பயிற்சி இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என எல்லாமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், சிறுத்தை சிவா அமைத்த திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை.
படத்தில் கதை என பெரிதாக ஒன்றுமில்லை என்பதால் பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. பார்க்கலாம்.. சூர்யா நடிப்பு நன்றாக இருக்கிறது.. கிராபிக்ஸ் நன்றாக இருக்கிறது என தனித்தனியாக சொல்கிறார்களே தவிர படம் சிறப்பாக இருக்கிறது என பெரும்பாலானோர் கூறவில்லை.
இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷனில் படக்குழு என்னென்ன பேசினார்கள் என பிரபல யுடியூப்பர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
2 ஆயிரம் கோடி வசூல். தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான் – ஞானவேல்.
கங்குவா கட்டுப்படுத்த முடியாத காட்டாறு – சிறுத்தை.
படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள் – சூர்யா.
திரை தீப்பிடிக்கும்..
100 தடவை பாத்துட்டேன்.. ஆனா புதுசா இருக்கு – மதன் கார்க்கி.
சூர்யா கண்டிப்பா அரசியலுக்கு வரணும் – போஸ் வெங்கட்.
உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யா – நடிகர் கருணாஸ்
38 மொழிகள்.. 11,500 திரைகள் – ஞானவேல் ராஜா
இரண்டரை மணி நேரம் 10 நிமிடம் கூஸ்பம்ஸாக இருக்கும் – ஞானவேல்
மரத்துல ஏறி தலைகீழா தொங்க சொன்னா உடனே சூர்யா மளமளவென ஏறிடுவார் – சிறுத்தை சிவா..
இந்திய சினிமாவில் யாரும் பார்க்காத சண்டை காட்சிகள் இருக்கு – சிறுத்தை சிவா
எக்ஸ் தளத்தில் லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் எலன் மஸ்க் – சூர்யா ரசிகர்கள்
பாகுபலி படத்தை எடுக்க எனக்கு இன்ஸ்பிரேசனே சூர்யாதான் – ராஜமௌலி
என எல்லாவற்றையும் பகிர்ந்து கிண்டலடித்திருக்கிறார் புளூசட்ட மாறன். நல்ல கதை இல்லாத திரைப்படத்தை எவ்வளவு புரமோஷன் செய்தாலும் அது எடுபடாது என்பதே அவரின் கருத்தாக இருக்கிறது.