10 சின்ன படம் காலி!. உங்க ரூல்ஸ் ஆர்.ஜே.பாலாஜிக்கு இல்லையா?!.. விளாசும் புளூசட்ட மாறன்!..

by சிவா |
rj balaji
X

#image_title

சில வாரங்களுக்கு முன்பு சூர்யாவின் கங்குவா படம் வெளியான போது அப்படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் தியேட்டர்களுக்கே போன பல யூடியூப் சேனல்கள் 'படம் எப்படி இருக்கு?' என ரிவ்யூ கேட்க ரசிகர்களோ எதிர்மறையான விமர்சனங்களை சொன்னார்கள்.

படம் நன்றாக இல்லை.. படத்தில் கதையே இல்லை.. சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.. சூர்யா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் கத்திக்கொண்டே இருக்கிறார்கள்.. படத்தில் வரும் காட்சிகளுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை.. எல்லாம் தனித்தனியாக இருக்கிறது.. படம் டோட்டல் வேஸ்ட் என பலரும் சொல்ல அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

kanguva

kanguva

இதனால் படத்தின் வசூல் கடுமையாக பாதித்ததாகவும், இனிமேல் புதிய படங்கள் வெளியாகும் தியேட்டரில் யுடியூப் சேனல்களை அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார். அதேபோல், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தனஞ்செயனோ சூர்யா மீதுள்ள வன்மத்தில் திட்டமிட்டு சில நடிகர்களின் ரசிகர்களும், சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் படத்திற்கு எதிராக கருத்துக்களை சொல்லி படத்தை காலி செய்துவிட்டனர் என சொன்னார்.

எனவே, கடந்த வாரம் வெளியான ஜாலியோ ஜிம்கானா, எமக்கு தொழில் ரொமான்ஸ், நிறங்கள் மூன்று போன்ற படங்கள் வெளியானபோது தியேட்டரில் யுடியூப் சேனல்களி அனுமதிக்கவில்லை. நேற்று ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படம் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

review

#image_title

எனவே, ஆர்.ஜே.பாலாஜியே மைக்கை எடுத்துக்கொண்டு படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படத்தை பற்றிய அபிமானங்களை கேட்டு வருகிறார். இதை விமர்சித்துள்ள புளூசட்ட மாறன் ‘உங்கள் ரூல்ஸ் ஆர்.ஜே.பாலாஜிக்கு கிடையாதா?.. பப்ளிக் ரிவ்யூக்கு தடை விதித்தால் சின்ன படங்கள் பாதிக்கப்படும் என எல்லோரும் சொல்கிறார்கள். கடந்த வாரம் பப்ளிக் ரிவ்யூக்கு அனுமதி கொடுத்திருந்தால் பல சின்ன படங்கள் ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்கும். அது நடக்காததால் அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை.. போனதும் தெரியவிலை.. இதற்கு திருப்பூர் சுப்பிரமணியன் என்ன சொல்ல போகிறார்?.

பப்ளிக் ரிவ்யூக்கு தடை போட்டதால் 10 சின்ன படங்கள் ஓடவில்லை. அடுத்து வரும் புஷ்பா 2, விடுதலை 2, கேம் சேஞ்சர் மற்றும் விடாமுயற்சி போன்ற படங்களுக்கு பப்ளிக் ரிவ்யூக்கு தடை போடும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் முதுகில் பல பேர் குத்தியிருக்கிறார்கள்! பிரபலம் சொன்ன தகவல்

Next Story