ஆனாலும் புளூசட்ட மாறன் குசும்பு புடிச்சவர்தான்...நல்லவேளை அந்த டைட்டில் வைக்கல!...
தமிழ் சினிமாக்களை விமர்சனம் என்ற பெயரில் பிரித்து மேய்ந்து வருபவர் புளுசட்ட மாறன். ஒரு படத்தை எத்தனை பேர் பாராட்டினாலும் இவர் படத்தை கிழித்து தொங்கப்போட்டு விடுவார்.
படத்தின் நிறை பற்றி கொஞ்சமாக பேசிவிட்டு குறைகளை அதிகமாக பேசி நக்கலடிப்பார். இவருக்கென ஒரு ரசிகர் வட்டாரமும் இருக்கிறது. திரையுலகில் பல இயக்குனர்கள் இவருக்கு எதிராக கொதித்தெழுந்த சம்பவமெல்லாம் நடந்தது.
ஒரு கட்டத்தில் நீ ஒரு படத்தை இயக்கு.. அது எப்படி இருக்குன்னு நாங்க பாக்குறோம் என பலரும் கூற, அந்த சவாலை ஏற்று ‘ஆண்டி இண்டியன்’ என அதகளமான தலைப்புடன் களம் இறங்கினார் புளுசட்டமாறன். இப்படம் வரட்டும் நான் விமர்சனம் செய்கிறேன் என பாரதிராஜாவே தெரிவிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் மாறன்.
ஆண்டி இண்டியன் படம் ஒரு வழியாக முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவில் மத்திய அரசின் ஆதரவாளர்கள் இருப்பதால் அவர்கள் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எந்த காரணத்தையும் கூறாமல் கிடப்பில் போட்டனர். அதன்பின், பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் பல இடங்களில் காட்சி இருப்பதால் 38 இடத்தில் கட் கொடுக்குறோம்.
ஆண்டி இண்டியன் என்கிற தலைப்பையும் மாற்றுங்கள். உங்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கிறோம் எனக்கூற அதிர்ந்து போனார் புளூசட்டமாறன். பின் நீதிமன்றத்தை நாட அவருக்கு நியாயம் கிடைத்தது. சில கட்களுடன் U/A சான்றிதழ் கிடைத்து இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாறன் ‘இப்படத்திற்கு ஆண்டி இண்டியன் என தலைப்பு வைத்தேன். சென்சாரில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ‘கேணப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை’ என வைக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். தற்போது எதிர்ப்புகளை தாண்டி இப்படம் வெளியாகவுள்ளது’ என தெரிவித்தார்.
குசும்பு பிடிச்சவர்தான் இந்த புளூசட்டமாறன்...