ரஜினிக்கு அவங்க மேலலாம் காண்டு.. அதுக்குதான் இந்த வசூல் வடை.. கம்பு சுத்தும் புளூசட்டமாறன்..

விமர்சனம் என்கிற பெயரில் திரைப்படங்களை கொத்து பரோட்டா போட்டு வருபவர் புளூசட்ட மாறன். நல்ல கதையம்சம் கொண்ட கலைப்படங்களை தவிர மற்ற படங்களை கடுமையாக நக்கலடித்தும், கிண்டலடித்தும் பேசுவார். இதனால், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.

சில இயக்குனர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றது. ஆனால், என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே கொஞ்சமும் தயங்காமல் பேசும் விமர்சகர். இவர் சினிமா விமர்சனம் மட்டுமில்லை. ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சிப்பார். இதனால், அவர்களின் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானர்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் விவகாரம்!. அவங்கள பார்த்து தமிழ் நடிகர்கள் கத்துக்கிடணும்.. கொந்தளித்த பேரரசு..

ஜெயிலர் படத்தை துவக்கம் முதலே மாறன் கிண்டலடித்து வந்தார். ஆடியோ விழாவில் ரஜினி பேசிய காக்கா - பருந்தை கதையில் என்னைத்தான் ரஜினி காக்கா என சொல்லிவிட்டார் என கோபப்பட்டார். அதன்பின் விஜயை சொன்னார் என்றார். ரஜினி ரசிகர்கள் இவர் மீது கடுப்பாகி மிரட்டல் விட காவல் நிலையத்திலும் புகாரளித்தார்.

ஒருபக்கம் ஜெயிலர் படம் வசூல் தொடர்பாக வரும் செய்திகளையும் நக்கலடித்து வருகிறார். ஜெயிலர் திரைப்படம் 4 நாட்களில் ரூ.300 கோடி வசூலை தாண்டிவிட்டதாக டிவிட்டரில் பலரும் தெரிவித்தனர். ஆனால், மூவி ட்ராக்கர்கள் சொல்வதெல்லாம் பொய், இத்தனை கோடி வசூல் கிடையாது.. நன்றாக வடை சுடுகிறார்கள்.. என மாறன் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ரஜினி-விஜய் போட்டியால் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் – கெத்தை காட்ட அந்த முயற்சியில் இறங்கப் போகும் தல

இந்நிலையில், ரஜினி மற்றும் அவரின் ரசிகர்களின் டார்க்கெட் 4 பேர்தான். முதலில் கமல். விக்ரம் படத்தின் வசூலை ரஜினியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னை கமல் முந்துவிட்டாரே என்கிற ஆற்றாமையில் இருக்கிறார்.. எனவே அவரின் ரசிகர்கள். ஜெயிலர் படம் விக்ரம் படத்தின் ரூ.420+ கோடி வசூலை தாண்டிவிட்டதாக அல்வா தருகிறார்கள்.

அடுத்து, இப்போதை சூப்பர்ஸ்டார் விஜய்தான் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து, வசூலில் ரஜினிதான் நம்பர் ஒன் என படம் வந்த 2ம் நாளே குதிக்கிறார்கள். 3வது காரணம் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையராக நடிக்க ரஜினியே வாய்ப்பு கேட்டும் அவர் கொடுக்கவில்லை. அந்த படம் ரூ.500 கோடி வசூலை தாண்டியதும், அவரின் இயக்கத்தில் நடிக்க சுஹாசினி மூலம் ரஜினி தூதுவிட்டார். ஆனால், அவர் கமலுடன் இணைந்ததால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். எனவே, பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை ஜெயிலர் படம் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள்.

நான்கவாதாக ராஜமவுலி. அவருக்கு ரஜினி பலமுறை தூதுவிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை. அல்லு அர்ஜூன், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு ஆகியோருடன் வேலை செய்வதால் தலைவருக்கு புகைச்சல். எனவே, ஆயிரம் கோடி வசூலை ஜெயிலர் பெறும் என கதை விடுகிறார்கள்..ஆயிரம் கோடி மட்டும்தானா? இல்லை அதுக்கும் மேலயா? என மாறன் நக்கலடித்துள்ளார்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் கிங் நான்தான்!.. சைலைண்டா நிரூபித்த ரஜினி!… ஜெயிலர் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?!…

 

Related Articles

Next Story