Cinema News
ராக் ஸ்டாரை மாத்தி ராபரி ஸ்டார்னு வச்சிக்கோ!. அனிருத்தை விளாசிய புளூசட்ட மாறன்…
Anirudh: சினிமாவை பொறுத்தவரை கதையோ, பின்னணி இசையோ, பாடலோ, ஒரு நடிகரின் மேனரிசிமோ திருடுவது அதாவது காப்பி அடிப்பது என்பது பல வருடங்களாக இருக்கும் ஒன்றுதான். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அது இருக்கிறது. சில இத்தாலி மொழி திரைப்படங்களை தமிழுக்கு ஏற்றதுபோல் மாற்றி எம்.ஜி.ஆரே படமெடுத்துள்ளார்.
ரீமேக் என்றால் அது முறையாக உரிமை வாங்கி எடுப்பது. ஆனால், பெரும்பாலான இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதை செய்வது இல்லை. ஏனெனில், படத்தின் கதையை மட்டும் அங்கிருந்து எடுத்து திரைக்கதையை கொஞ்சம் மாற்றிவிடுவார்கள். இதனால், ரீமேக் உரிமை வாங்க தேவையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு.
இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ வெற்றியால் துள்ளும் ரஜினி! கண்ட்ரோல் முழுக்க அவர்தான் – ரஜினி170ல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ஞானவேல்
கேட்டால் இன்ஸ்பிரேஷன் என சொல்வார்கள். இதற்கு அட்லியை விட ஒரு சிறந்த உதாரணத்தை சொல்லிவிட முடியாது. மற்றவர்களாவது ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்களில் இருந்து அடிப்பார்கள். ஆனால், அட்லியோ ஏற்கனவே ஹிட் அடித்த தமிழ் படங்களையே உல்டா செய்து, கொஞ்சம் மாற்றி எடுப்பார். திரைக்கதை வேறாக இருப்பதால் அது வேறுபடம் போல தெரியும் அவ்வளவுதான்.
சமீபத்தில் வெளியான லியோ படம் கூட ‘A History of Violence’ என்கிற படத்தின் தழுவல்தான். ஆனால், இன்ஸ்பிரேசன் என டைட்டைல் கார்டில் போட்டார்கள். அதேபோல், அந்த படத்தில் இடம் பெற்ற ‘ஆர்டினரி பர்சன்’ பாடலின் இசைக்கோர்வை ஆங்கில இசையமைப்பாளர் ஆட்நிகாவின் இசை என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். மேலும், ஆட்நிக்காவுக்கே சிலர் டேக் செய்துவிட்டனர்.
இதையும் படிங்க: ஒன்னு ஒன்னா கிழிக்க வேண்டாம்! மொத்தமா கிழிச்சா போதும் – லியோ பட தயாரிப்பாளருக்கு வாய் பூட்டு போட்ட தளபதி
இதைத்தொடர்ந்து ‘என்ன நடந்தது என தெரியவில்லை.. பார்த்து சொல்கிறேன்’ என அவர் சொல்லிவிட்டார். அவர் வழக்கு தொடர்ந்தால் இது அனிருத்துக்கும், தயாரிப்பாளருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், பிரபல யுடியூபர் புளூசட்டமாறன் அனிருத்தை விமர்சித்துள்ளார்.
டிவிட்டரில் ‘வெளிநாட்டு இசையை திருடி தொடர்ந்து அசிங்கப்பட வேண்டியது. ஆனா பேரு மட்டும் ராக்ஸ்டார். ராபரி ஸ்டார்னு மாத்திக்கலாம். இதெல்லாம் ஒரு பொழப்பு.. இவரைத்தான் இளையராஜவும், ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்த கலவைன்னு ஒருத்தர் சொன்னாரு.. ப்ளடி’ என பதிவிட்டுள்ளார்.
அனிருத்தை அப்படி சொன்னது ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.