நான் சொன்ன குட்டிக்கதைய ஜெராக்ஸ் எடுத்து பேசிட்டார்!.. விஜயை பங்கம் பண்ணிய பிரபலம்...

by சிவா |
vijay
X

Leo Sucess meet: மேடைகளில் பிரபலங்கள் குட்டிக்கதை சொல்வது என்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. நடிகையும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமாக இருந்த ஜெயலலிதா தான் பேசும் மேடைகளில் அவரின் கட்சி தொண்டர்களுக்காக ஒரு குட்டிக்கதையை சொல்வார். அவருக்கு முன்பே குட்டிக்கதை சொல்வதை ரஜினி, பாக்கியராஜ் ஆகியோர் ஒரு பழக்கமாக கொண்டிருந்தனர்.

இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் தான் நடத்திய பாக்யா இதழில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் ஒரு குட்டிக்கதை மூலமே பதில் சொல்வார். அதேபோல், ரஜினியும் பல வருடங்களாக தான் பேசும் சினிமா விழாக்களில் ஒரு குட்டிக்கதை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை கௌரவப்படுத்திய விஜய்! ‘லியோ’ சக்சஸ் மீட்டில் எத்தனை பேர் இத நோட் பண்ணீங்க?

குட்டிக்கதை மூலம் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த முடியும். மேலும், வாழ்க்கைக்கு தேவையான ஒரு நல்ல கருத்தையும் அதில் கூற முடியும். அதேபோல், சில குட்டிக்கதைகள் மூலம் தான் யார் என்பதையும் மறைமுகமாக ரசிகர்களுக்கு சொல்ல முடியும் என்பதால்தான் ரஜினி குட்டிக்கதையை சொல்லி கொண்டிருக்கிறார்.

ஜெயிலர் பட விழாவில் ‘பருந்து எப்போதும் மேலே பறந்து கொண்டிருக்கும். காக்கா பருந்தின் உயரத்திற்கு பறக்க முயற்சி செய்யும். ஆனால், பருந்து அளவுக்கு காக்காவால் பறக்க முடியாது’ என அவர் சொன்ன குட்டிக்கதை தனது இடத்தை பிடிக்க ஆசைப்படும் நடிகர்களுக்கு அவர் சொன்ன பதில் என்றே பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: லியோ பட விழாவில் நடந்த மாபெரும் மோசடி!.. அடுத்த ரஹ்மான் நிகழ்ச்சியாக மாறிய சக்சஸ் மீட்…

ஒருபக்கம், ரஜினியை பின்பற்றி நடிகர் விஜயும் தான் கலந்துகொள்ளும் விழாக்களில் குட்டிக்கதைகளை சொல்லி வருகிறார். நேற்று நடந்த லியோ வெற்றி விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய் ‘ஒரு காட்டுல யானை,புலி, மான், காக்கா, கழுகு என பல மிருகங்கள் இருந்தது. அந்த காட்டுக்கு வேட்டையாட 2 பேர் போனாங்க. ஒருத்தவர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தார். இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறிவச்சி ஒன்னும் இல்லாம திரும்பி வந்தார். இதுல யார் வெற்றியாளர்?.. கண்டிப்பாக யானைக்கு குறை வைத்தவர்தான். ஏன்னா இலக்கு பெரிதாக இருக்க வேண்டும். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க’ என விஜய் கூறினார்.

இதையடுத்து, பிரபல யுடியூபர் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் வந்தப்போ நான் சொன்ன குட்டிக்கதையை ஜெராக்ஸ் எடுத்து விஜயிடம் கொடுத்திருக்கிறார் அவரின் ஸ்கிரிப்ட் ரைட்டர். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் சொன்ன கதையைத்தான் நேத்து மேடையில உருட்டினியா?’ என டிவிட்டரில் தான் பேசிய வீடியோவையும் இணைத்து விஜயை கலாய்த்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://twitter.com/tamiltalkies/status/1719964330526122241

Next Story