
Cinema News
அஜித் மானஸ்தர்.. ஆனா ஒருத்தர் இருக்காரு!.. ரஜினியை வம்பிக்கிழுத்த புளூசட்ட மாறன்…
நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை ரசிகர்களோ, ஊடங்களோ தன்னை தல என அழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அஜித் ஏற்கனவே, தனது தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர். அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டும் என்றார். தற்போது தன்னை தல என அழைப்பதை நிறுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், விமர்சனம் என்கிற பெயரில் பிரபல நடிகர்களின் திரைப்படங்களை கிழித்து தொங்கவிடும் புளூசட்டமாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இவர் மானஸ்தர். ரசிகர் மன்ற கலைப்பு, அல்டிமேட் ஸ்டார், தல பட்டம் துறப்பு. ஆனால் கட்சியே ஆரம்பிக்காமல், மக்களுக்கு நல்லது செய்யாமல்.. ‘தலைவர்’ பட்டத்தை வைத்துள்ளார் ஒருவர். அவர் யார்?’ என மறைமுகமாக ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அவரை வாய்க்கு வந்த படி திட்டி வருகின்றனர். இவர் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களை படு கேவலமாக விமர்சனம் செய்தவர். எனவே, விஜய், அஜித், சிம்பு ஆகியோரின் ரசிகர்கள் இவரை தங்களின் எதிரியாகவே பார்க்கிறார்கள். அவர் டிவிட்டரில் என்ன பதிவு போட்டாலும் அங்கு சென்று அவரை திட்டுவதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
புளுசட்ட மாறன் ‘ஆண்டி இண்டியன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகிறது. சமீப காலமாக புளூசட்ட மாறன் நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.