Parasakthi: ஹிந்தி எதிர்ப்புனு சொல்லி ஹீரோ தெலுங்கு கத்துக்குறாப்ல! ‘பராசக்தி’யை பங்கம் பண்ணிய மாறன்

நேற்று சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் திரையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் செய்த போராட்டத்தை மையப்படுத்தி இயக்குனர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரத்னமாலா என்ற கேரக்டரில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் அதர்வா, ரவிமோகன் ஆகியோர் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜிவிக்கு இது 100வது படம். வழக்கம் போல் இசையில் தன்னுடைய எஃபர்ட்டை போட்டிருக்கிறார் ஜிவி. இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் பராசக்தி படத்தை பார்த்து அவருடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது 1930கள் காலகட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு. 1964 வரை நடந்த சம்பவம்தான்.

அதனால் 1930கள் காலகட்டத்தில் மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்ட நடராஜன், தாணமுத்து, சின்னச்சாமி போன்றவர்களை எல்லாம் காண்பிப்பார்கள், அவர்கள் பட்ட கஷ்டம், ஏன் இந்தியை நாம் எதிர்த்தோம், அதனால் நமக்கு என்ன நல்லது நடந்தது? எதிர்த்ததால் என்னென்ன விளைவுகளை நாம் எதிர்கொண்டோம் என்பதை படத்தில் காட்டுவார்கள் என்று எதிர்பார்த்துதான் படத்தை போய் பார்த்தோம்.

ஆனால் இவங்ககிட்ட எல்லாம் இதையெல்லாம் நாம் எதிர்பார்த்ததற்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்பது போல் ஆகிவிட்டது. இந்தப் படத்தின் இயக்குனர் பாலாகிட்ட இருந்தவங்க. மணிரத்னம் சார்கிட்டயும் உதவியாளராக இருந்திருக்காங்க. அதனால பாலா எடுக்க வேண்டிய இந்தப் படத்தை மணிரத்னம் சார் மாதிரி மசாலா எல்லாம் கொஞ்சம் தடவி படத்தை கொடுத்திருக்காங்க சுதா கொங்கரா.

படம் சொல்லவர வேண்டிய கதையை ஹீரோ வில்லன் கதையாக மாத்திருக்காங்க.அங்க இங்க இந்தியை பத்தி பேசிருக்காங்க. அவ்வளவுதான்.படத்தின் முதல் சீனை பார்க்கும் போது சரியான காட்டு மொக்கை படத்தை எடுத்து வச்சிருக்காங்கனு தெரிஞ்சு போச்சு. எடுத்ததும் ரயிலை எரிக்குறாங்க. ஏன் எரிக்குறாங்க? எப்படி ஹிந்தி திணிப்பு வந்தது என்று எதை பத்தியும் சொல்லாமல் எடுத்ததும் ரயிலை எரிச்சா எப்படி புரியும்? இதென்ன திரில்லர் படமா? கடைசில அதற்கான காரணத்தை சொல்றதுக்கு? முட்டாள்தனமா எடுத்து வச்சிருக்காங்க.

சுமார் 40 வருட கதை. 10 பார்ட்டாக எடுக்க வேண்டிய படத்தை இரண்டரை மணி நேரத்துல கொடுத்துருக்காங்க. அதில் ஒரு மணி நேரம் ஹீரோயின் பின்னாடியே ஹீரோ சுத்துறாரு. ஹிந்தி திணிப்பு எதிர்ப்புனு சொல்லி கடைசில ஹீரோ ஹீரோயின் கிட்ட தெலுங்கு கத்துக்கிட்டதுதான் மிச்சம். நம்ம திடீர் தளபதி நல்லா நடிக்கிறவருதான். ஆனால் இதுல என்னால நடிக்க முடியாது போடானு சொன்ன மாதிரி அவர் நடிப்பு இருந்துச்சு என மாறன் பொளந்து கட்டியிருக்கிறார்.