இயக்குனர் டிடி.பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான படம் லெனின் பாண்டியன். இந்தப் படம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
படத்துல ஏழை விவசாயிக்கு அநீதி நடக்கு. அதைத் தட்டிக் கேட்க போனா, அது ஒரு பெரிய சட்டைப் போராட்டமா இருக்கு. அது ஒரு கதை. இன்னொன்னு தன்னோட அப்பா இறந்ததுக்காக ஒருத்தருக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைக்குது.
அந்த வேலைல விருப்பம் இல்லன்னா கூட அதை வேண்டா வெறுப்பா செஞ்சிக்கிட்டு இருக்காரு. அவரு ஆபீஸ்லயே 10 பைசா மதிப்பு கூட அவருக்கு கிடையாது. அவரைத் தெண்டம்னு சொல்லி ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க. இந்த ரெண்டு கேரக்டரும் ஒரு பெரிய சிஸ்டத்தை எதிர்த்து இயங்க வேண்டி இருக்கு. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.
ஒரு பெரிய பணக்காரனைக் காப்பாத்த, ஒட்டு மொத்த சிஸ்டமும் எந்தளவுக்குப் போகும்கறதை ரொம்ப அழகா காட்டிருக்காங்க. சாமானிய மக்களோட கடைசி நம்பிக்கை நீதிமன்றம்கற அருமையான விஷயத்தையும் காட்டிருப்பாங்க. கோர்ட் சீன் ரொம்ப எக்ஸ்ட்ராடினரி. நல்ல நீதிபதிக்கிட்ட நல்ல கேஸ் போனா எந்தமாதிரி எல்லாம் நடக்கும்னு அட்டகாசமாக காட்டிருப்பாங்க.
படத்துல சீரிஸா கதை போகும். நமக்கு சிரிப்பா இருக்கும். இன்டர்வல் பிளாக் அட்டகாசமா இருக்கும். செகண்ட் ஆஃப் பர்ஸ்ட் ஆஃப் அளவு இல்லை. படத்துல கங்கை அமரன் கேரக்டர் அருமையா இருந்துச்சு. அவரு நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது. தர்ஷன் இன்னொரு ஹீரோ. அவரு நடிப்பும் சூப்பர். விஏஓ வா ஒரு பொண்ணு அருமையா நடிச்சிருக்காங்க. இளையராஜா பேக்ரவுண்ட் மியூசிக் அருமை.
இந்தப் படத்து கிளைமாக்ஸ் இது கிடையாதுன்னு தோணுச்சுன்னா இந்தப் படம் ரொம்ப சுமாரா இருக்கும். படத்துக்கு நல்ல கிளைமாக்ஸ்னு தோணுச்சுன்னா இது நல்ல படம். இதை எல்லாம் தாண்டி படத்துல நாலு நல்ல சீன் இருந்தா போதும்னு நினைச்சித் தான் பார்ப்போம். பர்ஸ்ட் ஆஃப் முழுக்க நல்ல கருத்து. செகண்ட் ஆஃப்ல மாறுபட்ட கருத்து. ஆனா மோசமான படம் இல்லை என்கிறார் புளூசட்டை மாறன்.







