முதலில் தனுஷ்...இப்ப சிம்பு...அடுத்த டார்கெட் யார்?!...கவுதம் மேனனை கலாய்க்கும் புளூசட்டமாறன்...
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தின் நீளம் சலிப்படைய வைப்பதாகவும், வழக்கமான கதைதான் எனவும் பலரும் தெரிவித்தனர்.
ஒருபக்கம் யுடியூப் விமர்சகர்களும் படத்தை கிண்டலடித்தனர். இதில், புளூசட்டைமாறனும் ஒருவர். புளூசட்டைமாறனின் விமர்சனம் கவுதம் மேனனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது போல. எனவே, சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பேசும் போது மறைமுகமாக அவரை தாக்கியே பேசி வருகிறார்.
அதோடு, சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘புளுசட்டமாறனை இறங்கி செய்யலாம் போல இருக்கு’ என நேரிடையாகவே பேசியிருந்தார். இதையடுத்து, புளூசட்டமாறன் டிவிட்டர் பக்கத்தில் கவுதம் மேனனுக்கு எதிராகவே கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அசுரன் ஹிட் படம் கொடுத்த தனுஷுக்கு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரு தோல்வி படத்தை கொடுத்தார் கவுதம் மேனன். அதேபோல், மாநாடு என ஹிட் படத்தை கொடுத்த சிம்புவுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ தோல்வி படத்தை கொடுத்துள்ளார். அடுத்து அவரிடம் சிக்கப்போகும் ஹீரோ யார்? என கிண்டலடித்துள்ளார். மேலும், மேனன் என்கிற சாதி பெயரை தன் பேருக்கு பின்னால் போட்டுக்கொண்டு சாதியில்லாமல் படம் எடுத்து வருகிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.