என்ன பண்றது.. கஷ்டமாத்தான் இருக்கு!.. விஜய் ஆண்டனியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!..

by சிவா |
blue
X

தமிழ் சினிமா நடிகர்களையும், வழக்கமான லாஜிக் இல்லாத மசாலா படங்களையும் கடந்த பல வருடங்களாகவே நக்கலடித்து வருபவர் புளூசட்ட மாறன். தமிழ் டாக்கிஸ் என்கிற யுடியூப் சேனலில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவருக்கு நேர்த்தியான, கலைப்படங்கள் மட்டுமே பிடிக்கும் போல.

அல்லது கமர்ஷியல் படமாக இருந்தாலும் ரசிக்கும்படியும், லாஜிக்குடன் இருக்க வேண்டும் என நினைப்பவர். அதனாலோ என்னவோ அது இரண்டும் இல்லாமல் போனால் சகட்டுமேனிக்கு படங்களை நக்கலடிப்பார். குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் படங்களை இவரை போல மோசமாக விமர்சனம் செய்தவர் யாரும் கிடையாது.

இதையும் படிங்க: வார இறுதிக்கு பக்கா ஸ்கெட்ச்… ஓடிடியில் வரிசை கட்டிய வெப்சீரிஸ்.. இதோ லிஸ்ட்..

இதனாலேயே அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு புளூசட்ட மாறனுக்கு பிடிக்காது. அவர்கள் மட்டுமல்ல. நடிகர்கள் யாராக இருந்தாலும் விமர்சனம் செய்வார். டி.இமான் விஷயத்தில் சிவகார்த்திகேயன் சிக்கியபோது அவரை வச்சு செய்தார். அதன்பின் விஜய் ஆண்டனி பக்கம் போனார்.

அவரின் நடிப்பில் ரோமியோ படம் வெளியான போது செமயாக நக்கலடித்தார். எடிட்டிங் முதல் விஜய் ஆண்டனி எல்லாவற்றிலும் தலையிடுகிறார் என போட்டு தள்ளினார். இது விஜய் ஆண்டனிக்கு கோபத்தை ஏற்படுத்த புளூசட்ட மாறனை விமர்சித்து விஜய் ஆண்டனி அறிக்கையே வெளியிட்டார்.

அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வெளியன போதும் அவரை வம்புக்கு இழுத்தார். ஒரு நிமிட காட்சி எனக்கு தெரியாமல் வைத்துவிட்டனர் என அப்படத்தின் இயக்குனர் பஞ்சாயத்த இழுத்தது மாறனுக்கு கண்டெண்ட்டாக மாறியது. இப்போது படம் வெளியாகி 2 வாரத்தில் ஓடிடிக்கு வந்துவிட்டது அந்த படம்.

இதையும் படிங்க: கோட்டை விட்ட தனுஷ்…தட்டி தூக்கிய நித்யா மேனன்… 2 தேசிய திரைப்பட விருதை வென்ற திருச்சிற்றம்பலம்..

இதையடுத்து ‘புதிய படங்கள் 4 வாரங்களுக்கு பின் ஓடிடிக்கு வருகிறது. ஆனால், அதை 8 வாரங்களாக மாற்ற வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், ஆகஸ்டு 2ம் தேதி ரிலீஸான இந்த படம் 2 வாரங்களில் ஓடிடி-க்கு வந்துள்ளதாமே!.. இது நியாயமா?’ என பதிவிட்டிருக்கிறார்.

புளுசட்ட மாறன் உண்மையிலேயே அக்கறையில் கேட்கிறாரா? இல்லை நக்கலடிக்கிறாரா என்பதே பலருக்கும் தெரியவில்லை. இதையடுத்து ‘என்ன செய்றது கஷ்டமாத்தான் இருக்கு’ என பதிவிட்டு ரசிகர்களும் கிண்டலடித்து வருகிறார்கள்.

Next Story