அஜித்தோட எத்தனை படம் பிளாப்புன்னு தெரியுமா?... விடாமல் சண்டை போடும் புளூசட்ட மாறன்...
அஜித் நடித்து கடந்த மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. திரைத்துறையில் இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின் அப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என விமர்சகர்கள் பலரும் தெரிவித்தனர். அஜித் ரசிகர்களுக்கு பிடித்ததே ஒழிய பொதுவான சினிமா ரசிகர்களை இப்படம் கவரவில்லை எனக்கூறப்பட்டது.
அதோடு, விமர்சனம் என்கிற பெயரில் புதிய படங்களை கிழித்து தொங்கவிடும் தமிழ் டாக்கீஸ் புளூசட்டமாறன் இப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், அஜித்தின் உருவத்தையும் கிண்டலடித்தார். பார்ப்பதற்கு அஜித் பஜன்லால் சேட் போல இருப்பதாகவும், முகத்தில் தொப்பை விழுந்துள்ளதாகவும் அவர் நக்கலடித்தார்.
இதற்கு நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் நடிகர் ஆரி ஆகியோர் ஒரு விழாவில் கண்டனத்தை தெரிவித்தனர். அதிலும், ‘அஜித் பற்றி பேச நீ யாருடா வெண்ண’ என்கிற ரேஞ்சுக்கு ஆர்.கே.சுரேஷ் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம், புளூசட்டமாறனை அஜித் ரசிகர்கள் மிகவும் கடுமையாகவும், கொச்சையாகவும் அவரின் டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகின்றனர். மாறனும் விடாமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். குறிப்பாக, மாறன் இயக்கிய ஆண்டி இண்டியன் பிளாப் ஆனதாகவும், ஒரு பிளாப் படத்தை கொடுத்துவிட்டு நீ வலிமை படம் பற்றி பேசுகிறாயா என தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித் நடித்த ஆழ்வார்,ஜனா, நேசம், பகைவன், ஆஞ்சநேயா, ரெட், ஏகன், அசல், பில்லா 2, விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என பல படங்கள் வாஷ் அவுட் ஆனது’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் அஜித் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.