கல்யாணம்-னு சொன்னதும் வொர்க் அவுட்-ஆ...! வைரலாகும் கடல் நாயகன் புகைப்படம்..
நவரசநாயகனின் மகனும் நடகருமான கௌதம் கார்த்திக். இவர் கடல் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலயே தன் முத்திரையை பதித்தார். இந்தாலும் அந்த காலத்தில் கார்த்திக் என்றாலே இப்ப உள்ள ப்ளேபாய் மாதிரிதான். அந்த அளவுக்கு ரொமான்ஸ், குறும்புத்தனம் அடங்கிய ஒரு நடிகர்.
அப்பாவே அப்டினா மகன் எப்டி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரைப்போல் ரீச் ஆகவில்லை. எனினும் தொடர்ந்து படங்கள் வந்த நிலையில் இருந்தது. 'வை ராஜா வை', 'ரங்கூன்', 'இவன் தந்திரன்' , ஆனந்தம் விளையாடும் வீடு என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும், இதுவரை எந்தப் படமும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்யவில்லை.
தேவராட்டம் படத்தின் மூலம் இறங்கி நடித்திருப்பார். அதில் ஒரு கரகாட்டப்பாடலுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட வைத்திருப்பார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருப்பார். அந்த படத்திற்கு அப்புறம் இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்கப் பட்டது. அது இப்போ கல்யாணம் வரை சென்றுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இந்த நிலையில் விக்ரம், அருண்விஜய், இவர்கள் பாணியில் தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்க்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறார். அதில் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.