Cinema History
கமல் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்த நடிகர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை!.. அட சோகமே!..
Actor kamalhaasan: கமல் தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்றே கூறலாம். வந்தோமா நடித்தோமா என இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் கமல் சினிமாவின் உள்ளே புகுந்து பல ஆராய்ச்சிகளை செய்பவர். இப்படியும் ஒரு மனிதன் நடிக்க முடியுமா என ஏங்கும் அளவிற்கு தனது நடிப்பினை வெளிக்காட்டியவரும் கூட.
இவர் தந்து சிறுவயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். களத்தூர் கண்ணம்மா திரைப்படமே இவரின் சினிமா வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டது என்று கூறலாம். மேலும் இவர் நடித்த தசாவதாரம், விக்ரம் போன்ற திரைப்படங்கள் இவரின் புகழை உலகளவில் கொண்டு செல்ல உதவியது.
இதையும் வாசிங்க:ரஜினியோட இந்த படம் எம்ஜிஆர் படத்தோட காப்பியா?.. அட என்னடா சொல்றீங்க!…
வயதானாலும் இவருக்கு சினிமா மீது உள்ள பற்று இன்னும் போகவில்லை. ஒவ்வொரு திரைப்படத்திலும் முழுமையாக தன்னை அர்பணித்து விடுவார். மேலும் சினிமவில் நவீன தொழில்நுட்பங்கள் என்ன வந்துள்ளது என்பதை பற்றி தெரிந்து வைத்து கொண்டே இருப்பாராம். அவற்றை தனது திரைப்படங்களிலும் பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டவர் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் தேவர் மகன். இப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் வாசிங்க:சிவாஜியுடன் காதலா?!.. சந்தேகப்பட்ட தாய்… தேவிகா என்ன செஞ்சாங்க தெரியுமா?…
ஆனால் இவர் இப்படத்தினை பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டாராம். அதில் பாலிவுட் நடிகரான திலிப்குமாரை சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம். ஆனால் திலிப் குமார் தனது வயது முதிர்ச்சியாலும் உடல்நிலை ஒத்துழைக்காததாலும் அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதனால் கமலின் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லையாம்.
பின் வேறு நடிகர்களை வைத்து அவர் அப்படத்தை ஹிந்தியில் வெளியிட்டாராம். இதனால் தான் கமல் தனது ஆசை நிறைவேறாமல் போன மாதிரி வேறு எந்த நடிகர்களின் ஆசையும் நிறைவேறாமல் போகக்கூடாது என்பதற்காக தன்னுடன் எந்த இளம் நடிகர் நடிக்க ஆசைப்பட்டாலும் அவர்களுடன் நடிக்க ஒத்து கொள்வாராம்.
இதையும் வாசிங்க:ஷாருக்கானுக்கே விபூதி அடித்த விஜய்!.. குறுக்கே வந்த கெளசிக் கமல்ஹாசன்!.. என்ன ஆகப் போகுதோ?..