ஸ்ரீதேவிக்கு டப் கொடுத்த நடிகை இவர் தான்...தற்போது இவருக்கு இவ்வளவு வயது என்று சொன்னால் யாருமே நம்பமாட்டீங்க...!

இந்தித்திரையுலகில் மறக்க முடியாத நடிகை. துள்ளலான நடிப்பையும், தூக்கலான நடனத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதில் இவருக்கு இணை யாருமே இல்லை. அவர் தான் மாதுரி தீட்சித்.

ஸ்ரீதேவிக்கு டப் கொடுத்த நடிகை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அந்தஸ்தை உடையவர். ஓவியர் எம்.எப்.ஹ_சைன் இந்தியாவிலேயே மிக அழகான பெண் மாதுரி தீட்சித் தான் என்றார். அதுமட்டுமல்லாமல் 2000த்தில் கஜகாமினி என்ற பெயரில் இவரை வைத்து ஒரு படமே இயக்கியுள்ளார்.

மாதுரி தீட்சித்தின் மிகப்பெரிய ரசிகர் இவர். 6 பிலிம் பேர் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தற்போதும் சினிமாவில் நடித்துக்கொண்டுள்ளார். தற்போது இவருக்கு வயது 55க்கும் மேல் என்றால் யாராலும் நம்ப முடியாது. இவர் தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக என்ஜினீயர் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஏனோ அந்தப்படம் வெளியாகவில்லை.

maduri dixiy

1967 மே 15ம் தேதி சங்கர் -சினேகலதா தம்பதியினருக்கு கடைசி மகளாகப் பிறந்தார். இவருக்கு ஒரு அண்ணன், 2 அக்கா உள்ளனர். இவரது கணவர் ஸ்ரீராம் மாதவரேனே. இவர் ஒரு கார்டியாலாஜிஸ்ட். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பள்ளிப்படிபபை மும்பையில் முடித்துள்ளார். இவர் 8 வருடமாக கதக் நடனத்தைக் கற்றுக்கொண்டார். புத்த பூர்ணிமா என்ற பண்டிகையில் இவருக்கு நடனமாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தனது 9வது வயதிலேயே அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து மாதுரி கூறுகையில், இந்தப் பெண் மொத்த ஷோவையே களவாடிவிட்டாள் என ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. ஆனால் இந்த நியுஸ் போட்டது யாருன்னு தெரியல.

என்னை இந்த அளவு உயரத்துல வச்சி பத்திரிகையில செய்தி போட்டதப் பார்த்ததும் எனக்கு நிலாவ விட பெரிய அளவுல வளர்ந்துட்டதாகவும், பெரிய அளவில ஜெயிக்கப்போறதாகவும் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. எனது சாதனைகள் அனைத்துக்கும் இந்த ஒரு அடித்தளம் தான் காரணம். கதக் டான்ஸ் மூலமாகத் தான் நான் பெரிய அளவில வளர்ந்துருக்கேன் என்றார்.

இவர் பிஎஸ்சி மைக்ரோபயாலஜி படிப்பதற்காக முயற்சி செய்துள்ளார். 6 மாதம் படித்துக்கொண்டிருக்கும்போதே இவருக்கு சினிமா வாய்ப்பு வந்து விட்டது. உடனே படிப்பை நிறுத்திவிட்டு இவர் சினிமாவிற்குள் நுழைந்தார். 1984 அபோக் என்ற ஒரு இந்திப்படத்தில் இவர் முதலில் அறிமுகமானார்.

தேஜாப்

1988 தேஜாப் என்ற படத்தில் ஏக்தோ தீன் என்ற பாடல் இடம்பெற்றது. இது மிகப்பெரிய வெற்றியடைந்த பாடல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதில் அனில்கபூருக்கு ஜோடியாக நடித்தார்.

கே.பாக்யராஜின் எங்க சின்ன ராசா படத்தின் ரீமேக் இந்தியில் வெளியானது. இதில் அனில்கபூருக்கு ஜோடியாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அருணாயிராணி என்பவர் தான் சி.ஆர்.சரஸ்வதி ரோலை பண்ணியிருந்தார். இந்தப் பொண்ணுக்கு நடிக்குற திறமை மிக அதிகமாகவே இருக்கு என்று அனைத்து தரப்பினரும் புகழாரம் சூட்டினர். பல விருதுகளையும் வாரிக்குவித்தது இந்தப்படம்.

கல்நாயக்

khalnayak maduri dixit

ஜாக்கி ஷெராப், மாதுரி தீட்சித், சஞ்சய் தத் உள்பட பலர் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் சஞ்சய் தத் வில்லனாக நடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. ஜாக்கி ஷெராப் தான் ஹீரோ. இவர் யாருன்னா தளபதி விஜயின் பிகில் படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.

அவர் தான். இந்தப்படத்தில் சோளிகே பீச்சே கியா ஹை என்ற பிரபலமான பாடல் உள்ளது. இதே படம் ஹீரோ என்ற பெயரில் தமிழில் வெளியானது. ரகுமான், சுகன்யா, வினோத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இதே படம் ரீமேக்கானது. ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தியில் தான்.

ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்

salmonkan, maduri dixit

ஹம் ஆப்கே ஹெய்ன் கோன் என்ற படம் செம ஹிட் ஆனது. இந்தப்படத்திற்கு என்ன அர்த்தம் என்றால் நான் உனக்கு யார் என்பது தான். பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப்படம் 2 தேசிய விருதுகளை வாங்கியது.

மேலும் கின்னஸ் விருதை வென்ற படமும் இதுதான். மிகப்பெரிய வசூல் சாதனைக்காக இவ்விருது கிடைத்தது. ஷோலே படத்தின் சாதனைகளையும் முறியடித்தது. இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செமயாக இருக்கும். நடனம் சூப்பராக இருந்தது.

தேவ்தாஸ்

2002ல் வெளியான தேவ்தாஸ் படம் மெகா ஹிட்டானது. ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் நடித்துள்ளனர். மாதுரி தீட்சித் சந்திரமுகியோட ரோல் பண்ணிருப்பாரு. டோலாரே N;டாலாரே பாடல் பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கும். இந்தப்பாடலை ஷ்ரேயா கோசலும், கவிதா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து பாடியுள்ளனர்.

Related Articles
Next Story
Share it