காசு கொடுத்து சோறு போட்டேன்!.. நன்றி இல்லாதவர் சூரி!.. போண்டா மணி வேதனை!…
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ, வில்லன் மற்றும் காமெடி நடிகர்கள் என இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால், அவர்களோடு நடிக்கும் சின்ன சின்ன நடிகர்கள் என்றால் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு காட்சியில் நடித்தால் சில நேரம் 500 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். அதை வைத்துதான் அடுத்த வாய்ப்பு வரும் வரை ஓட்ட வேண்டும். கவுண்டமணி, வடிவேல், விவேக் ஆகியோருடன் பல சின்ன சின்ன காமெடி நடிகர்கள் இணைந்து நடிப்பார்கள். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். இல்லையேல் படாத பாடு பட வேண்டும்.
குடும்பம் நடத்த, வாடகை கட்ட, குழந்தைகளின் பள்ளி செலவுகள் என மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நிலை கூட வரும். இதில் கவுண்டமணியும், வடிவேலுவும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். விவேக் மற்றும் மயில்சாமி ஆகியோர் தன்னால் முடிந்த உதவிகளை தனக்கு தெரிந்த காமெடி நடிகர்களுக்கு செய்வார்கள். இதை பல நடிகர்களில் ஊடகங்களில் கூறியுள்ளனர்.
வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் போண்டா மணி. சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில உதவி செய்தனர். ஆனால், வடிவேல் எந்த உதவியும் செய்யவில்லை. இதை அவரே பல பேட்டிகளிலும் கூறிவிட்டார்.
இந்நிலையில், நடிகர் சூரி மீதும் புகார் கூறியுள்ளார் போண்டாமனி. ‘சூரி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நாட்களில் நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு காதல் சுகுமார் அவரை கூட்டி வருவார். தினமும் 200 ரூபாய் சூரிக்கு கொடுப்பேன். பல நாட்கள் என் வீட்டில் தங்கியி சாப்பிட்டு செல்வார். ஆனால், வளர்ந்த பின் சூரி எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பணம் கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. என் உடல் நலம் பற்றி கூட அவர் விசாரிக்கவில்லை. சினிமாவில் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என வேதனையுடன் பேசியுள்ளார் போண்டாமணி.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தர்பார் படம் ஃபிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறந்த முருகதாஸ்!..