More
Categories: Cinema News latest news

இப்படி நன்றி மறந்துட்டாரே சூரி- போண்டா மணி சொன்ன சோக கதை… அடப்பாவமே!

சூரி தொடக்கத்தில் சினிமாத்துறையில் பல சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். அதன் பின் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சூரிக்கு, “வெண்ணிலா கபடிக்குழு” திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அத்திரைப்படத்தில் சூரி 50 புரோட்டா சாப்படும் காட்சி  மிகப் பிரபலமானதால் அவரது பெயர் புரோட்டா சூரி என்றே அறியப்பட்டது.

Advertising
Advertising

கதாநாயகன் சூரி

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்தார். இவ்வாறு மிக முக்கியமான காமெடி நடிகராக திகழ்ந்து வந்த சூரி, “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரியின் நடிப்பு அசத்தலாக இருந்ததாக பலரும் கூறினார்கள். சூரி ஒரு நகைச்சுவை நடிகர் என்பதே ஞாபகம் வரவில்லை எனவும் அந்தளவுக்கு மிக நேர்த்தியாக நடித்திருந்தார் எனவும் பல விமர்சகர்கள் பாராட்டினர்.

ஃபோன் கூட பண்ணலை…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் போண்டா மணி, சூரியின் மீதான வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். நடிகர் போண்டா மணி சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி, அவருக்கு பண உதவி செய்தார்கள்.

அப்பேட்டியில் பேசிய போண்டா மணி, சூரி சினிமாவில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தபோது அவருக்கு பல முறை சாப்பாடடு போட்டிருக்கிறாராம் போண்டா மணி. ஆனால் சூரி வளர்ந்த பின்பு அவருக்கும் போண்டா மணிக்கும் அவ்வளவாக தொடர்பு இல்லாமல் போய்விட்டதாம். எனினும் அவ்வபோது சூரியிடம் தொடர்புகொண்டு “நல்ல நிலைமைக்கு வரணும்” என்று உத்வேகம் கொடுப்பாராம். மேலும் அவரிடம் பல முறை வாய்ப்பு கேட்டிருக்கிறாராம் போண்டா மணி. ஆனால் சூரி ஒரு பேச்சுக்காக வாய்ப்பு தருகிறேன் என கூறுவாராம். ஆனால் வாய்ப்பு தரவில்லையாம்.

ஆனால் போண்டா மணி , உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது தொலைப்பேசியில் அழைத்துக்கூட நலம் விசாரிக்கவில்லையாம் சூரி. இது குறித்து அப்பேட்டியில் பேசிய போண்டா மணி, “சூரி பண உதவி செய்யவேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் என்னிடம் ஃபோனில் கூட பேசவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க- இந்த காமெடி காட்சிக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருக்கா?

Published by
Arun Prasad

Recent Posts