உயிருக்கு போராடும் போண்டாமணி...காப்பாற்ற சொல்லி கதறும் நகைச்சுவை நடிகர்...

தமிழின் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் போண்டா மணி. குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து போண்டா மணி கலக்கிய நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலமானவை.
“சீப்பு திருடிட்டா, கல்யாணம் நின்னுடும்ல”, “அடிச்சி கூட கேப்பாங்க அப்படியும் சொல்லிடாதீங்க” போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானவை.
இந்த நிலையில் இருதய கோளாறு ஏற்பட்டு கடந்த மே மாதம் சென்னை தனியார் மருத்துவமனையில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தற்போது நகைச்சுவை நடிகர் பெஞ்சமீன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் “போண்டா மணிக்கு தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவர் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். உயிருக்கு போராடி வரும் போண்டா மணிக்கு மேல் சிகிச்சைக்காக உதவுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையில் இருந்து தமிழகம் வந்து மிகவும் போராடித்தான் அவர் காமெடி நடிகர் ஆனார். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ கூறி போண்டா மணியை காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன். இலங்கையில் இருந்து அனாதையாக வந்தவர் அவர். அவரை அனாதையாக போகவிட்டுவிடாதீர்கள்” என கூறியுள்ளார்.