லாக்டவுன் மீறி வெளியாகும் வலிமை... போனிகபூர் போட்ட மாஸ்டர் பிளான்...

by சிவா |   ( Updated:2022-01-06 06:11:45  )
லாக்டவுன் மீறி வெளியாகும் வலிமை... போனிகபூர் போட்ட மாஸ்டர் பிளான்...
X

அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

மேலும், இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு காட்சி ஒளிபரப்பாகாது. அதிகம் பேர் தியேட்டருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த வசூலும் போச்சு. எனவே, வலிமை படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

இதுபற்றி போனிகபூர் வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர் அதிபர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எப்படி இருந்தாலும் படத்தை வெளியிடுங்கள் என அவர்கள் போனிகபூரிடம் கூறியுள்ளனர். மேலும், கூறிய தொகையை விட குறைத்து கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

அதே நேரம், சில வினியோகஸ்தர்கள் இவ்வளவு சிக்கலில் நாங்கள் படத்தை வாங்க விரும்பவில்லை எனக்கூறிவிட அந்த ஏரியாக்களில் போனிகபூர் மற்றும் பிரபல வினியோகஸ்தர் அன்பு செழியன் ஆகியோர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஒருவேளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் படம் வெளியாகி 2 வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். எதுவாக இருந்தாலும் வருகிற 10ம் தேதி இறுதியான முடிவு தெரிந்துவிடும்.

Next Story