தில் ராஜுவுக்கு போட்டியாக போனிகபூர்!.. நான் சொல்றேன் யாரு No:1னு!!..
இன்னும் ஒரு வாரகாலத்திற்கு ஒட்டு மொத்த தமிழகமே அல்லோலப்பட போகுது என்றே சொல்லலாம். நாளைக்கு ரிலீஸ் ஆகக்கூடிய வார்சு மற்றும் துணிவு ஆகிய படங்களின் தாக்கம் எந்த நிலைமைக்கு ரசிகர்களை கொண்டு செல்ல போகிறத் என்று தெரியவில்லை.
போட்டிக் களமாக இருக்கும் இந்த இரு படங்களில் வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்ற தலைப்பிலேயே கடந்த சில வாரமாக செய்திகளாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டி எப்பவும் போல இருந்தாலும் அதை இன்னும் சூடுபிடிக்க வைத்தது வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தான்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆருக்கு நடிகையால் ஏற்பட்ட அவமானம்!.. வளர்ந்த பின் என்ன செய்தார் தெரியுமா?…
விஜய் தான் நம்பர் 1 என்று சொல்லி மற்ற நடிகர்களின் அதிருப்தியை பெற்றார். இதே வேலையாக சுற்றிக் கொண்டிருக்கும் தில் ராஜு தெலுங்கில் பவன்கல்யாண் வைத்து ஒரு படத்தை எடுத்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் மேடையில் சிரஞ்சீவி, அல்லுஅர்ஜூன், ராம்சரண் இவர்கள் முன்னிலையில் தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் பவன் கல்யாண் என்று சொல்லி விமர்சனத்தை பெற்றார்.
அதே நிலைமைதான் இப்பொழுது தமிழ் சினிமாவிலும். இந்த நிலையில் துணிவு படத்தை பற்றி முதன் முதலாக பேட்டியில் கூறியிருக்கிறார் அந்த படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர். அவர் இதை பற்றி பேசும் போது விஜய் அஜித் இருவருக்கும் நல்ல செல்வாக்கு இருக்கிறது மக்கள் மத்தியில்.
ஆனால் நம்பர் 1 என்று சொன்னால் அது படத்தின் கதை மட்டுமே. மற்றபடி விஜயையோ அஜித்தையோ சொல்வது அவரவர் மனதில் நினைத்தப்படி இருக்கும். என்னை பொறுத்தவரைக்கும் கதை மட்டுமே நம்பர் 1 என்று கூறினார். போனிகபூரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.