எனது மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ்தான் - மேடையிலேயே ஜொள்ளுவிட்ட போனிகபூர்!..
கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கென்று பல இளைஞர் கூட்டம் ரசிகர்களாக இருக்கின்றனர். தொடக்கத்தில் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ், அதன் பின் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். அதன் பின் பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நடிகர்களும் கலந்துகொண்டனர். இதில் பிரபல தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் நேற்று ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர், “எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலியான மற்றும் கவர்ச்சியான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான்” என கூறினார். போனி கபூரின் இந்த பேச்சை இணையத்தில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
போனி கபூர் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருந்தாலும், தமிழில் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, “நெஞ்சுக்கு நீதி”, “வீட்ல விசேஷம்”, “துணிவு” ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இசையமைக்க முடியாது; அடம்பிடித்த எம்.எஸ்.வி: வீட்டுக்கு போய் சம்மதம் வாங்கிய எம்.ஜி.ஆர்..