அஜித்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொக்கி போடும் போனி கபூர்....!
ஒரு படத்திற்கு இயக்குனரும் நடிகரும் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தயாரிப்பாளரின் பங்கும் மிக முக்கியம். ஏனெனில் படத்தின் பட்ஜெட் மற்ற விஷயங்கள் கைமீறி செல்லும்போது தயாரிப்பாளர் சரியாக இருந்தால் மட்டுமே அந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் திடீரென அவரின் கவனத்தை கோலிவுட் பக்கம் திசை திருப்பினார். மேலும் கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தை வைத்து மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்க்கொண்ட பார்வை, தற்போது உருவாகியுள்ள வலிமை படம், இதனை தொடர்ந்து உருவாகி வரும் ஏகே 61 ஆகிய மூன்று படங்களை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த மூன்று படங்களையுமே இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போனிகபூர் தற்போது அஜித்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பெரிய நடிகரை அவரின் தயாரிப்பில் நடிக்க அணுகியுள்ளாராம். அதன்படி போனி கபூர் அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை தனது தயாரிப்பில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்காக போனிகபூர் நடிகர் மோகன்லாலுக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமா கொடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும் என்பதால், போனி கபூர் இந்தப்படத்தை பெரிய அளவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க இருப்பதாக மலையாள சினிமாவில் கூறி வருகின்றனர்.