அஜித்தின் அடுத்த படத்தையும் நான் தான் தயாரிப்பேன் - தொடரும் வெற்றி கூட்டணி!

by பிரஜன் |   ( Updated:2021-09-29 20:29:18  )
bony-kapoor
X

bony kapoor

நடிகர் அஜித் எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை இடத்தில் அஜித் பைக் ரேஸராக அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் நடித்துள்ளார் .

இப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு வலிமை படம் குறித்து பேட்டியளித்த போனி கபூர், அஜித்தின் அடுத்த படத்தையும் தானே இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

h-vinoth

h vinoth

மேலும், அந்தப்படத்தையும் இயக்குனர் எச் வினோத் இயக்குவார் என கூறினார். இந்த வெற்றிக்கூட்டணி ஏற்கனவே நேர்கொண்ட பார்வை என்ற சமூக அக்கறையுள்ள படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டது. தொடர்ந்து வலிமை, அடுத்த புதிய படம் என இணைவதால் எச். வினோத் அடுத்த சிவா என கூற துவங்கிவிட்டனர். சிறுத்தை சிவா அஜித்தை வைத்து, வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ச்சியாக இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story