அம்மா கேரக்டரில் நடிக்கும் விஜய் சூர்யா பட நடிகை....! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
நடிகைகள் மார்க்கெட் இழந்து விட்டால் அம்மா அக்கா கேரக்டரில் நடிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகை ஒருவர் தற்போதே அம்மா கேரக்டரில் நடிக்க வந்து விட்டாராம். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த நடிகை வேறு யாருமல்ல விஜய் சூர்யாவுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை பூமிகா தான். கடந்த 2001ஆம் ஆண்டு தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதனை தொடர்ந்து ரோஜாக்கூட்டம், சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
மேலும், களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த பூமிகாவிற்கு சமீபகாலமாக நாயகி வாய்ப்பு கிடைக்காததால் அக்கா அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென புதிய படம் ஒன்றில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிகை பூமிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் உருவாக உள்ள பட்டர்பிளை என்ற படத்தில் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரனுக்கு தான் பூமிகா அம்மாவாக நடிக்க உள்ளாராம்.
முன்னதாக பூமிகா ஜோடி சேர்ந்து நடித்த விஜய், சூர்யா ஆகியோர் இன்றும் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடன் டூயட் பாடிய பூமிகா அம்மா கேரக்டரில் நடிக்கும் செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.