கம்மி பட்ஜெட் படத்துக்கு இவ்வளவு கோடி கடனா? இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட அருண் விஜய்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அருண் விஜய், அறிவழகன் இயக்கத்தில் “பார்டர்” என்று ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இதனை தொடர்ந்து ஒரு வழியாக பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆதலால் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் திடீரென இத்திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் நிலையில் இல்லை எனவும் இத்திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் “பார்டர்” திரைப்படத்தின் வெளியீடு குறித்து ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “பார்டர்” திரைப்படம் பத்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம். ஆனால் இந்த படத்திற்கு 12 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். ஒரு வேளை 2 கோடி அதிகமாக செலவழித்து இத்திரைப்படத்தை வெளியிட்டாலும், விநியோகஸ்தர்கள் மூலம் தயாரிப்பாளருக்கு வெறும் 7 கோடியே கிடைக்குமாம்.
மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இத்திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட 15 பேரிடம் சிறிது சிறிதாக ஃபைனான்ஸ் வாங்கியிருக்கிறாராம். ஆதலால் “பார்டர்” திரைப்படம் இடியாப்ப சிக்கலில் சிக்கியிருப்பதாக பிஸ்மி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டைரக்டர் யார் என்றே தெரியாமல் கதை எழுதிய கே.எஸ்.ரவிக்குமார்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்டு!