ஷங்கரும் மணிரத்னமும்தான் சினிமாவை இப்படி ஆக்கிட்டாங்க! – மசாலா படங்களால் கடுப்பான பத்திரிக்கையாளர்!..

by Rajkumar |   ( Updated:2023-04-03 06:57:25  )
ஷங்கரும் மணிரத்னமும்தான் சினிமாவை இப்படி ஆக்கிட்டாங்க! – மசாலா படங்களால் கடுப்பான பத்திரிக்கையாளர்!..
X

தமிழ் திரைத்துறையில் வெகு காலங்களாக இயக்குனர்களாக இருந்து வருபவர்களில் இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம் முக்கியமானவர்கள். இருவருமே தமிழ் சினிமாவில் கமர்ஷியலாக நல்ல ஹிட் கொடுக்கக்கூட இயக்குனர்கள்.

ஆனால் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறும்போது தமிழ் சினிமாவில் அதிக மசாலா படங்கள் வருவதற்கு ஒரு வகையில் இவர்கள் இருவர்தான் காரணம் என கூறுகிறார்.

Shankar
Shankar

தமிழ் சினிமாவில் மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் வருவதற்கு முன்பு வரை வித்தியாசமான கதைக்களங்களுக்கு ஒரு இடம் இருந்தது. புது வகையான திரைப்படங்களை கூட மக்கள் பார்த்தனர். இதனால் கமர்ஷியலான மசாலா படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் கூட எப்பொழுதாவது புது கதைகளை இயக்க நினைத்தனர்.

ஆனால் மணிரத்னம், ஷங்கர் இருவருமே முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் எடுத்து அதில் பெரும் வெற்றியும் கொடுத்தனர். அதற்கு முன்பு வரை திரைப்படங்களில் கதாநாயகர்கள் ஏழையாகவோ அல்லது கூலி தொழிலாளியாகவோ இருப்பார். அந்த படங்களில் ஏழைகளின் பிரச்சனை, தொழிலாளர்கள் சம்பள உயர்வு என பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கும்.

கதை அம்சத்தை மாற்றிய இயக்குனர்கள்:

ஆனால் இவர்கள் இருவரது திரைப்படங்களிலும் அந்த மாதிரி விஷயங்கள் குறைவாகவே இருக்கும் என கூறுகிறார் பிஸ்மி. ஆனாலும் இவர்களது திரைப்படங்களே பெரும் வெற்றிகளை கொடுத்தன. அதற்கு முன்பு வரை இயக்குனர்கள் மிக குறைவான சம்பளமே பெற்று வந்தனர்.

manirathnam2

ஆனால் ஷங்கர், மணிரத்னம் இருவருமே கதாநாயகர்களுக்கு இணையான சம்பளத்தை பெற்றனர். இதனால் அடுத்து சினிமாவிற்கு வருபவர்களும் கூட ஷங்கர் மாதிரி மணிரத்னம் மாதிரியான இயக்குனர் ஆவதற்கே ஆசைப்படுகின்றனர்.

எனவே சினிமாவில் இப்படி அதிக மசாலா படங்கள் வருவதற்கு இவர்கள் இருவருமே ஒரு வகையில் காரணம் என்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.

Next Story