சிறுத்தையையும் சிங்கத்தையையும் ஒரே கூண்டுல அடைச்சா என்னாகும்? ஒன்றாக களமிறங்கும் சூர்யா - கார்த்தி

by Rohini |   ( Updated:2023-07-19 11:03:23  )
surya
X

surya

தமிழ் சினிமாவில் பாசமுள்ள சகோதரர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவரும் அவரவர் வழியில் தன்னுடைய திறமைகளை நிரூபித்து வருகின்றனர். சூர்யாவிற்கு பிறகு சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருந்தாலும் கார்த்தி வந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மனதை தட்டிச் சென்றார்.

surya1

surya1

அடிப்படையிலேயே கார்த்தி உதவி இயக்குனராக மணிரத்தினத்திடம் பணிபுரிந்திருக்கிறார். அதன் காரணமாகவே சினிமாவை பற்றிய எந்தவொரு பயமும் இல்லாமல் தான் கார்த்தி வந்தார். ஆனால் சூர்யா அப்படி இல்லை. ஆரம்பத்தில் மிகவும் தயங்கினார். சொல்லப் போனால் சூர்யாவிற்கு நடிக்கவும் நடனமும் தெரியாது.

இதையும் படிங்க :வனிதா என்னை தூக்கி போட்டு மிதித்தார், வலி தாங்க முடியல- நடிகை துஷாரா கதறல்!!

போக போகத்தான் கற்று கொண்டார். ஆனால் இப்பொழுது ஒரு தேசிய விருது நாயகனாக உயர்ந்திருக்கிறார்.ஒரு பக்கம் சிங்கமாக சூர்யாவும் மறுபக்கம் சிறுத்தையாக கார்த்தியும் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் எப்பொழுதும் உள்ள ஆசை இருவரையும் ஒன்றாக ஒரே திரையில் காண வேண்டும் என்பதுதான்.

surya2

surya2

சூர்யாவையோ கார்த்தியையோ எந்த ஒரு மேடையில் பார்த்தாலும் ரசிகர்களும் சரி நிரூபர்களும் சரி எப்பொழுது இருவரும் சேர்ந்து நடிப்பீர்கள் என்பது தான். இதற்கு இப்பொழுது தான் விடை கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே கார்த்தியின் நடிப்பில் கைதி 2 படம் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.

அதை லோகேஷ் ரஜினியின் படம் முடித்தவுடன் எடுக்க இருக்கிறார். மேலும் அதை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு கூட லோகேஷிடம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தையும் சேர்த்தே கைதி 2 வில் இடம் பெற வையுங்கள் , நான் சூர்யாவை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம். ஆக கூடிய சீக்கிரம் கைதி 2 வில் கார்த்தியையும் சூர்யாவையும் ஒன்றாக பார்க்கலாம்.

surya3

surya3

இதையும் படிங்க :மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்க தயார்!.. ஃபிளாப் படங்களால் இறங்கி வந்த சந்தானம்…

Next Story