நெத்தி அடியான டிராகன் படத்தின் ஒரு வார வசூல்... அள்ளு அள்ளுன்னு அள்ளிடுச்சே!

by sankaran v |
நெத்தி அடியான டிராகன் படத்தின் ஒரு வார வசூல்... அள்ளு அள்ளுன்னு அள்ளிடுச்சே!
X

இளம் நட்சத்திரங்களில் இப்படி ஒரு பாயும்புலியாய் பிரதீப் ரங்கநாதன்ன வருவாருன்னு யாருமே நினைச்சிருக்க மாட்டாங்க. அவரது டிராகன் படம் பெயருக்கு ஏற்ப நாளுக்கு நாள் வசூலில் எகிறிக்கொண்டே உள்ளது.

அதிரிபுதிரி ஹிட்: தமிழ்த்திரை உலகில் இளம் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் காட்டில் அடைமழைதான். கடைசியாக வெளிவந்த லவ் டுடே படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். இப்போது வெளியாகி உள்ள டிராகன் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு யதார்த்தமாக அதே நேரம் கெத்தாக இருந்தது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.

பெரும் வரவேற்பு: பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மெசேஜைச் சொன்னது இந்தப் படம். அதனால்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ் படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வசூலைப் பின்னுக்குத் தள்ளியது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் தனுஷ் தயாரித்து இயக்கிய படம். டிராகன் படம் இப்படி ஒரு வசூலை செய்யும் என யாரும் எதிர்பார்க்கல.

வசூல் வேட்டை: படத்தின் திரைக்கதை அம்சம்தான் அதற்குக் காரணம். இளம் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து படம் இயக்கியுள்ளார்.. அதனால்தான் வசூல் வேட்டையாடுகிறது.

குறுக்கு வழியில் போனால் வாழ்வில் எளிதில் முன்னேறி விடலாம் என்றே பலரும் நினைப்பார்கள். அதனால் அவர்கள் பாதையிலேயே பயணம் செய்கிறான் ஹீரோ. ஆனால் கடைசியில் ஜெயிப்பது நேர்மைதான் என்பதையே படம் தோலுரித்துக் காட்டுகிறது. அரியர்ஸ் போட்டு படிப்பது மாஸ் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறான் ஹீரோ.

நேர்வழி: அதற்கு பதிலாக என்னென்ன தண்டனைகள் கிடைக்கிறது? அதே நேரம் எப்படி எப்படி கஷ்டப்படுகிறான்? என்னென்ன வேலைகள் எல்லாம் செய்கிறான்? நேர்வழியில் பயணித்தால்; அரியர்ஸ் போடலைன்னா எப்படி முன்னேறி இருக்கலாம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.

1 வார வசூல்: இந்தப் படத்தில் நடக்கும் சில சம்பவங்கள் நமது வாழ்க்கையில் எங்கோ ஒரு இடத்தில் ஒட்டுகிறது. இதுதான் ரசிகர்களைக் கவரக் காரணம். இந்தப்படத்தின் 1 வார வசூல் என்னன்னு பார்க்கலாமா...

இந்திய அளவில் முதல்நாளில் 6.5கோடி, 2வது நாள் 10.8கோடி, 3வது நாள் 12.75கோடி, 4வது நாள் 5.8கோடி, 5வது நாள் 5.1 கோடி, 6வது நாள் 5.2 கோடி, 7வது நாள் 4 கோடி. ஆக மொத்தம் 50.15கோடி.

Next Story