ஆல் ஷோ ஹவுஸ்புல்!.. 9 நாளில் டிராகன் செய்த மெகா வசூல்!.. அதிரும் பாக்ஸ் ஆபிஸ்!...

Dragon Movie: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து பிப்ரவரி 21ம் தேதி வெளியான திரைப்படம் டிராகன். கோமாளி படத்தை இயக்கி ஹிட் கொடுத்து அடுத்து லவ் டுடே படத்தில் இயக்கி நடித்து அதுவும் ஹிட்டாக அமைய பிரதீப் கவனிக்கப்பட்டார். சுமார் 10 கோடியில் உருவான லவ் டுடே படம் 100 கோடி வரை வசூல் செய்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
அதன்பின் மறற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க துவங்கினார் பிரதீப். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே மற்றும் ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார். கல்லூரியில் பொறுப்பின்றி பல அரியர்ஸ் வைத்து வெளியேறும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் என்னவாகிறான் என்பதுதான் கதை.
குறுக்கு வழியில் சென்றால் அது நிலைக்காது. நேர்மை, உண்மை மட்டுமே நிரந்தரமான வெற்றி என்கிற கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஓ மை கடவுளே போலவே இந்த படத்திலும் இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் போது அதை கதாநாயகன் எப்படி பயன்படுத்துகிறான் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அஸ்வத்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது டான் படம் போல இருப்பதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். ஆனால், படம் பார்க்கும்போது யாருக்கும் அந்த எண்ணம் வரவில்லை. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர்.
மேலும், மிஷ்கின், ஜார்ஜ் மர்யான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பிரதீப்பின் அப்பாவாக வாரும் ஜார்ஜ் மர்யான் மிகவும் சிறப்பாக நடித்து பாராட்டை வாங்கியிருக்கிறார். டிராகன் படம் வெளியான நாள் முதலே தினமும் 8 கோடி வசூலித்து வருவதாக சொல்லப்பட்டது.
இப்போது 9 நாட்களில் இந்தியாவில் மட்டும் 62.25 கோடியை வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் 30 கோடி என மொத்தம் 90 கோடியை தாண்டியிருக்கிறது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் 10வது நாள் முடிவில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டிவிடும் என்றே கணிக்கப்படுகிறது. இப்போதும் பல ஊர்களில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.