பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டிய திரைப்படங்கள்!.. அதற்கெல்லாம் மூலக் காரணமாக இருந்த ஒரே பிரபலம்..
சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர்களின் படங்கள் நல்ல கதையாக அமைந்தால் மட்டுமே அது மக்களை மிக எளிதாக சென்றடைய வழிவகுக்கும். இன்னொரு ரகம் சினிமாவில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற நடிகர்களின் படங்கள் என்றால் அவர்களின் மார்கெட்டிற்காகவே சில நாள்கள் தாக்குப்பிடிக்கும்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, விஜய் போன்றோர்கள் மார்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். அவர்களின் படங்கள் அவர்களுக்காகவே அதிக வசூலை குவிக்கும். உதாரணமாக பீஸ்ட் படத்தை பொறுத்தவரைக்கும் முதல் நாள் வசூல் எக்கச்சக்க கோடிகளில் புரண்டது. ஆனால் கதையில் கோட்டை விட்டது.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆருக்கு பாதை அமைத்துக்கொடுத்த சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்… இப்படியெல்லாம் நடந்திருக்கா!!
இப்படி பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் தமிழிலும் சரி மற்ற மொழி சினிமாக்களிலும் சரி முன்னனி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு படம் கண்டிப்பாக அதிக வசூலைப் பெற்றிருக்கும். தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் பிரபு நடிப்பில் இன்றளவும் பெருசாக பேசப்படும் படம் என்றால் அது ‘சின்னத்தம்பி’ திரைப்படம் தான்.
அதே போல் சத்யராஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படம். ரஜினிக்கு பாட்ஷாவிற்கு அப்புறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை சந்தித்த படம் ‘சந்திரமுகி’ திரைப்படம் தான்.
இந்த மூன்று படங்களிலும் இருக்கும் ஒற்றுமை மூன்று படங்களையும் இயக்கியவரும் கதை எழுதியவரும் பி.வாசு. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் அக்கட தேச நடிகர்களான மோகன்பாபுவின் நடிப்பில் வெளிவந்த ‘அசெம்பிளி ரௌடி’ படம் அவரின் கெரியரிலேயே அதிக வசூல் பெற்ற படம், சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த ‘காரன மோகுடு’ திரைப்படம், இப்படி பல நடிகர்களுக்கு அதிக வசூல் பெற்ற திரைப்படத்தின் கதை பி.வாசுவின் கதையாக அமைந்தது தான் சிறப்பம்சமே.
இப்படி டாப் ஹீரோக்களின் கெரியரை திருப்பி பார்த்தால் என்னுடைய படங்கள் அவர்களின் பெஸ்ட்களில் கண்டிப்பாக இருக்கும் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறினார் பி.வாசு.