Categories: latest news

ஹீரோ தனுஷா?.. நாகார்ஜுனாவா?!.. குபேரா 3 நாள் வசூல் ரிப்போர்ட் இதோ!..

Kubera: தெலுங்கு சினிமா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 20ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் குபேரா. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. சேகர் கம்முலா கமர்ஷியல் படமெடுக்கும் இயக்குனர் இல்லை.

சீரியஸான படங்களை எடுப்பவர் இவர். குபேராவும் ஒரு சீரியஸ் படம்தான். ஒரு கார்ப்பரேட் முதலாளி பல லட்சம் கோடி கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற ஒரு திட்டம் போடுகிறார். சூழ்நிலை காரணமாக நேர்மையான சிபிஐ அதிகாரி நாகார்ஜுனா அவருக்கு உதவுகிறார். 4 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பினாமியாக்கி பணப்பறிமாற்றம் செய்ய திட்டமிடுகிறார்கள்.

அதில் ஒரு பிச்சைக்காரராக தனுஷ் இருக்கிறார். வேலை முடிந்த பின் பிச்சைக்காரர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார் வில்லன். இதை தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பிக்கிறார் தனுஷ். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் முதல் காட்சி வெளியானவுடனேயே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.

தனுஷ் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்காகவே படம் ஓடும் என சொன்னார்கள். ஆனால், 2 காட்சிகள் வெளியானபின் நெகட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கியது. படம் 3 மணி நேரத்தை தாண்டி ஓடுகிறது, இரண்டாம் பாதி நன்றாக இல்லை, கிளைமேக்ஸ் சரியாக அமைக்கப்படவில்லை, நிறைய இடங்களில் தொய்வாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆந்திர ரசிகர்களுக்கு இது நாகார்ஜுனா படம் எனவும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இது தனுஷ் படம் என்கிற உணர்வும் வந்தது. ஆந்திராவில் குபேரா சக்சஸ் மீட்டில் பேசிய நாகார்ஜுனா ‘தனுஷ் படமாக துவங்கினாலும் இந்த படத்தில் நான்தான் ஹீரோ’ என வெளிப்படையாகவே பேசினார்.

இந்நிலையில், குபேரா படம் 3 நாட்களில் 48.50 கோடி வசூலை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ், ஹிந்தியில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றாலும் தெலுங்கில் இப்படம் ஓரளவுக்கு வசூலை பெற்று வருகிறது. ஆனால், இது வெற்றிப்படமா இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Published by
சிவா