Kubera Collection: கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் அவ்வப்போது நடிப்பது தனுஷின் வழக்கம். ஆனால், அந்த படங்களெல்லாம் வசூலை வாரிக் குவிக்காது. இதில் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த 2 படங்களுக்காக தேசிய விருதும் வாங்கினார் தனுஷ்.
மேலும், தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். சில ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார். அந்தவகையில் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் குபேரன்.
இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடி யாரும் இல்லை. ஏனெனில், இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். மும்பையில் ஒரு கார்ப்பரேட் முதலாளி தனது கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற ஒரு திட்டம் போடுகிறார். அதில், தனுஷ் சிக்க, என்னவானது என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் வெளியானது. தனுஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படத்தின் கதை, திரைக்கதை முழு திருப்தியை கொடுக்கவில்லை. படம் 3 மணி நேரத்திற்கு மேலே ஓடுகிறது. அதோடு, இரண்டாம் பாதி திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனவே, ஒருகட்டத்தில் படம் போரடித்துவிடுவதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறார். எனவே, ஆந்திராவில் இப்படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது.
ஆனால், அது கூட 4 நாட்களுக்கு மட்டுமே. கடந்த 20ம் தேதி படம் வெளியான நிலையில் இப்படம் இதுவரை 55.10 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் 14.75 கோடி, 2ம் நாள் 16.5 கோடி, 3ம் நாள் 17.35 கோடி என வசூல் இருந்தநிலையில், 4ம் நாளான நேற்று 6.50 கோடியாக குறைந்துவிட்டது. இந்த வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் மொத்தமாக முடிந்துவிடும் என்றே கணிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…