Categories: latest news

குடும்பஸ்தன் ஒரு வாரத்தில் எவ்வளவு வசூல்னு பாருங்க… இனி எல்லாமே லாபம்தான்..!

இந்த ஆண்டு மதகஜராஜாவிற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் குடும்பஸ்தன். மதகஜராஜா விஷால், சந்தானம் நடிப்பில் காமெடியாக வந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 12 வருடங்களுக்குப் பிறகு வந்தாலும் காமெடியில் சக்கை போடு போட்டது. சந்தானம் பேசாமல் காமெடி ஆக்டராகவே இருந்துருக்கலாமே என்றார்கள்.

ஹீரோ மணிகண்டன்: அதன்பிறகு பல சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்தன. அப்படி வந்த 7 படங்கள்ல குடும்பஸ்தன் படமும் ஒன்று. 10 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இந்தப் படம் ஒரே வாரத்தில் போட்ட முதலை வசூலித்து விட்டது என்றே சொல்லலாம். படத்தின் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே ஜெய்பீம், குட் நைட் படங்களில் நடித்தவர். இவர் தேர்ந்தெடுக்கும் கதை சுவாரசியமாக இருப்பதால் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகின்றன.

குடும்பஸ்தன்: அந்த வகையில் தற்போது வந்துள்ள குடும்பஸ்தன் படமும் காமெடி கலந்து சுவாரசியமான திரைக்கதையுடன் வந்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கடந்த ஒரு வாரமாக வசூல் நிலவரம் எப்படின்னு பார்க்கலாமா…

10.08கோடி: முதல்நாளில் 1 கோடியும், 2வது நாளில் 2.2 கோடியும், 3வது நாளில் 3.15கோடியும், 4வது நாளில் 1.1கோடியும், 5வது நாளில் 1கோடியும், 6வது நாளில் 0.95கோடியும் வசூலித்துள்ளது. 7வது நாளில் முன்கூட்டிய கணக்கெடுப்பின்படி 0.68 கோடி வசூலித்துள்ளது. மொத்த வசூலாக 10.08கோடி வந்துள்ளது.

வேற லெவல்: குடும்பஸ்தன் படம் கடந்த ஜனவரி 24ல் வெளியானது. ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வே மேக்ஹனா, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். வைஸாக் இசை அமைத்துள்ளார். ஆரம்பத்தில் மெதுவாக பிக்கப் ஆனது. அப்புறம் பாசிடிவான விமர்சனங்கள் வர வர 3வது நாளில் படம் வேற லெவலுக்குச் சென்று விட்டது. படம் பாக்ஸ் ஆபீஸில் வேற லெவலில் ஹிட் ஆகியுள்ளது.

Published by
sankaran v